Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நத்தைகள் வெளியேற்றும் உடல் திரவத்திற்குப் புதுத் தேவை

நத்தைகள் மூலம் விவசாயிகள் மாதத்திற்கு 940 டாலர் வருமானம் ஈட்டுகின்றனர். 

வாசிப்புநேரம் -
நத்தைகள் வெளியேற்றும் உடல் திரவத்திற்குப் புதுத் தேவை

(படம்:AFP/Kerry Sheridan)

தாய்லந்தில் பெரிய ஆப்பிரிக்க நத்தைகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு இப்போது பொற்காலம் என்று கூறலாம்.

அவை அவர்களுக்கு பெரும் லாபம் ஈட்டித் தருகின்றன.

நத்தைகளின் உடலில் சுரக்கும் ஒருவகைத் திரவம், சருமத்தின் ஈரப்பதத்தைக் கட்டிக்காக்க உதவுகிறதாம்.

தோல் சுருக்கம், தழும்புகளும்கூட அந்தத் திரவத்தால் நாளடைவில் மறைகின்றனவாம்.

நத்தையின் திரவத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் அழகுக் களிம்பு தென்கொரியாவில் ஏகப் பிரபலம்.

நத்தையை ஒரு சிறிய கண்ணாடித் தட்டில் ஊரவிட்டு அதன் மேல் கொஞ்சம் நீர் ஊற்றினால் அது வழுவழுப்பான திரவத்தைச் சுரக்கும்.

மூன்று அங்குலம் கொண்ட அந்த நத்தைகளை விவசாயிகள் வயல்களில் சுற்றித்திரிய விடுகிறார்கள்.

நத்தைகளை அப்படி வளர்க்கும்போது அவை ஆரோக்கியமாக வளரும், தரமான உடல் திரவத்தைச் சுரக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

நத்தைகள் மூலம் விவசாயிகள் மாதத்திற்கு 940 டாலர் வருமானம் ஈட்டுகின்றனர்.

பெரிய மூலதனம் ஏதும் தேவையில்லை.

மழைக்காலத்தில் கொஞ்சம் சுற்றிவந்தாலே ஏராளமான நத்தைகளைச் சேகரித்து விடலாம் என்கின்றனர் விவசாயிகள்.

மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே நத்தைகளின் உடலில் இருந்து திரவம் சேகரிக்கப்படுகிறது.

ஆண்டுக்கு நான்கு மாதம் அவற்றுக்கு விடுமுறையாம் !
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்