Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இரத்தப் பரிசோதனையில்லாமல் உடல் சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள புது கருவி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலில் உள்ள சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள இனி இரத்தம் சிந்த தேவையில்லாமல் போகலாம்.

வாசிப்புநேரம் -
இரத்தப் பரிசோதனையில்லாமல் உடல் சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள புது கருவி

(படம்:Reuters)

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலில் உள்ள சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள இனி இரத்தம் சிந்த தேவையில்லாமல் போகலாம்.

பாத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு புது கருவியை உருவாக்கியுள்ளனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள சிறிதளவு இரத்தம் சிந்தவேண்டியுள்ளது.

ஆனால் இரத்தம் சிந்தாமல் ஒருவரின் சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்ள புதிய கருவி உதவுகிறது. புது கருவி தோலுக்கு அடியிலுள்ள 'இன்டெர்ஸ்டிஷல்' (interstitial) திரவத்தின் உள்ள சர்க்கரை அளவைக் கணக்கிடுகிறது.

இதுவரை சோதனையில், கருவி மூலம் அளவிடப்படும் சர்க்கரை அளவும் இரத்தப் பரிசோதனையின் மூலம் அளவிடப்படும் சர்க்கரை அளவும் சமமாகவே உள்ளன.

ஆய்வாளர்கள் தொடர்ந்து கருவியைச் சோதித்து அதைப் பொது பயனீட்டுக்கு மேம்படுத்தி வருகிறார்கள்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்