Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

காதைக் குடைவது ஏன் தவறு?

காதைக் குடைவது சிலர் குளித்ததும் அன்றாடம் செய்யும் ஒரு பழக்கம்.

வாசிப்புநேரம் -
காதைக் குடைவது ஏன் தவறு?

(படம்: Pixabay)

காதைக் குடைவது சிலர் குளித்ததும் அன்றாடம் செய்யும் ஒரு பழக்கம்.

சிலருக்கு அது சுகமான ஒன்று.

எது காரணமாகயிருந்தாலும் மயில் இறகு, குச்சி போன்றவற்றைக் கொண்டு காதைக் குடைவது தவறு என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் 'cotton buds' எனும் பஞ்சு நுனியைக் கொண்ட குச்சிகளைக் கொண்டு காதுகளைக் குடைவதில் இருக்கும் அபாயங்களைப் பலர் அறிவதில்லை.

காதுகளை குடைவது ஏன் தவறு? சில தகவல்கள்:

1. காதுகளில் இயற்கையாக உருவாகும் 'earwax' எனும் மெழுகு நம் காதுகளுக்குப் பயன்மிக்க ஒன்று என்பதைப் பலர் கருதுவதில்லை. தூசு, அழுக்கு போன்றவை காதுகளின் உட்பகுதிகளை அடையாமல் இந்த மெழுகில் ஒட்டிக்கொள்கின்றன. அவற்றைச் சுத்தப்படுத்த தேவையில்லை. காதுகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது தான் அவற்றின் பயனே!

2. சிறுநீர் கழிப்பது, எச்சில் உமிழ்வது போன்ற பல வழிகளில் உடல் கழிவுப் பொருட்களை இயல்பாகவே நீக்கிவிடும். நாம் உணவை மெல்வது, தாடை அசைவுகள் போன்றவை இயல்பாகவே காதிலிருந்து தேவையற்ற மெழுகை வெளியே தள்ளிவிடும்.

3. காதிலுள்ள 'eardrum' எனும் சவ்வு காதின் ஆழமான பகுதியில் இருப்பதாக நினைத்து சிலர் அலட்சியமாக இருப்பார்கள். ஆனால் 'cotton buds' குச்சிகளைப் பயன்படுத்தும்போது அதற்கு அருகில்தான் அந்த சவ்வு உள்ளது. அவை 'cotton buds' குச்சிகளால் சில நேரங்களில் கிழிக்கப்படும்போது காதில் வலி ஏற்படும், சீழ் வடியும். இதனால் கேட்கும் ஆற்றல் பாதிக்கப்படலாம்.

4. 'Cotton buds' குச்சிகளைப் பயன்படுத்தி காதைக் குடையும்போது அது சுத்தம் அடைவதாக நினைக்கலாம். ஆனால் அதற்கு மாறாக அவ்வாறு செய்யும்போது காதுகளிலுள்ள மெழுகை நாம் மேலும் காதினுள் தள்ளி அடைக்கிறோம். இதனால் இந்த மெழுகு காதை அடைத்துக்கொண்டு பல சிக்கல்களை உண்டாக்கலாம்.

இருந்தாலும் காதுகளைச் சுத்தம் செய்தே தீர வேண்டுமா?

மருத்துவர்களை அணுகுங்கள்! அவர்கள் தகுந்த கருவிகளைக் கொண்டு பாதுகாப்பான முறையில் உங்கள் காதுகளைச் சுத்தம் செய்வர்!  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்