Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமான நிலையங்களில் ஆக அசுத்தமான இடம் எது?

உலகின் பல விமான நிலையங்களில் ஆக அசுத்தமான இடம் எது என்று ஆய்வு நடத்தப்பட்டது.

வாசிப்புநேரம் -

உலகின் பல விமான நிலையங்களில் ஆக அசுத்தமான இடம் எது என்று ஆய்வு நடத்தப்பட்டது.

அடுத்த வாரம் மார்ச் விடுமுறை தொடங்கவுள்ளது.

பல குடும்பங்கள் வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்வர்.

விமானத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது நிலையத்திலுள்ள எந்தெந்த இடங்களைத் தவிர்ப்பது நல்லது?

விமான நிலையங்களில் எந்தெந்த இடங்களில் கிருமிகள் அதிகம் உள்ளன என்பதைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டது டெக்சஸிலுள்ள காப்புறுதி இணையத்தளம் ஒன்று.

InsuranceQuotes.com எனும் அந்த இணையத்தளம் ஒரு சதுர அங்குலத்தில் எவ்வளவு கிருமிகள் இருக்கிறன என்பதைக் கணக்கெடுத்தது. இது CFU என்று குறிப்பிடப்படுகிறது.

அதன் முடிவுகள்?

விமான நிலையங்களில் ஆக அசுத்தமான இடம் பயணிகள் வசதிக்காகச் செய்யப்பட்டிருக்கும் சுய சேவை முகப்பு (self check-in kiosk).

அதன் CFU மதிப்பீடு 253,857.

இரண்டாம், மூன்றாம் நிலைகளை வகித்த இடங்களை விட இது வெகுவாக அதிகம்!

நாற்காலிகளில் கையை வைக்கும் பகுதி இரண்டாம் நிலையில் வந்தது. அதன் CFU மதிப்பீடு சுமார் 21,000.

சுமார் 19,000 CFU மதிப்பீடுடன் தண்ணீர் அருந்தும் இடம் மூன்றாம் நிலையில் வந்தது.

ஒப்பிட்டுப் பார்க்கையில் விமான நிலையங்களின் கழிவறை இருக்கையின் CFU மதிப்பீடு 172 தான்!
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்