Images
  • Whatsapp Limits
    (படம்: REUTERS/Thomas White)

WhatsApp-இல் மறைந்திடும் படங்கள், காணொளிகள் அம்சம்...இந்த வாரம் முதல்

WhatsApp செயலியில், மறைந்திடும் படங்களையும் காணொளிகளையும் அனுப்பும் புதிய அம்சம் அறிமுகமாகவுள்ளது.

View Once என்று அழைக்கப்படும் அந்தப் புதிய அம்சத்தின் மூலம், பயனீட்டாளர்கள் அனுப்பும் படங்களும் காணொளிகளும் பார்க்கப்பட்ட பின் அழிந்துவிடும்.

அவை பார்க்கப்பட்ட பின்னர், "திறக்கப்பட்டது" (opened) என்ற தகவல் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த அம்சத்தை அனைத்துப் பயனீட்டாளர்களும் இந்த வாரம் முதல் பயன்படுத்தலாம்.

View Once அம்சம் மூலம் அனுப்பப்படும் படங்கள், காணொளிகளை மற்றவர்களுக்கு அனுப்பவோ பகிரவோ திறன்பேசியில் சேமித்து வைக்கவோ முடியாது என CNET தொழில்நுட்பத் தளம் கூறியது.

அவை 14 நாள்களுக்குள் திறக்கப்படாவிட்டால், தானாகவே அழிந்துவிடும்.

Snapchat என்ற குறுஞ்செய்தி அனுப்பும் செயலிக்குப் போட்டியாக, Whatsapp, அந்தப் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Snapchat செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் படங்களும் காணொளிகளும் 24 மணி நேரத்திற்குப் பின் மறைந்துவிடும்.

சென்ற ஆண்டு, கிருமிப்பரவலால் பலரும் வீட்டில் இருந்ததால், Snapchatஇன் பயன்பாடு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

-Reuters 

Top