Images
  • Eye
    (படம்: Pixabay)

கண்களுக்குள் கிருமிநாசினி பட்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

கூடத்துக்குள் செல்லும் நபர்கள்மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

அவ்வாறு தெளிக்கப்படும் கிருமிநாசினி கண்களில் பட்டுவிட்டால் என்ன செய்வது?


கண் நிபுணர் டாக்டர் ஜெயந்த் ஐயரிடம் (Dr Jayant iyer) 'செய்தி' அதுகுறித்து விளக்கம் கேட்டது.

கிருமிநாசினி கண்களில் பட்டால், பெரும்பாலான நேரங்களில் ஒன்றும் ஆகாது. கொஞ்சம் எரியும். ஆனால் மிதமிஞ்சிய அளவில் கிருமிநாசினி கண்களுக்குள் போனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ஏற்பட்டால் முதலில் சாதாரணக் கண் சொட்டு (Artificial Tears) மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.


7-11 போன்ற கடைகளில் அந்தச் சொட்டு மருந்து கிடைக்கும். அதுவே கிருமிநாசினியைப் போக்கிவிடும். கண் சொட்டு மருந்து வீட்டில் இல்லையென்றால், சுத்தமான தண்ணீரில் கண்களைக் கழுவலாம். 2-3 நிமிடங்களில் அது சரியாகி விடும்.

கண் சிவந்துவிட்டாலோ பார்வை மங்கலாக இருந்தாலோ மருத்துவரை நாடுவது நல்லது. 

கண்களில் மீண்டும் கிருமிநாசினி படாமல் இருக்க முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று டாக்டர் ஜெயந்த் தெரிவித்தார்.  

Top