Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தொலைபேசி இல்லாத வாழ்க்கைக்கு 100ஆயிரம் டாலர் பரிசு

காலையிலிருந்து இரவுவரை தொடுதிரையைப் பார்த்தே நேரம் செல்கிறது பலருக்கு.

வாசிப்புநேரம் -
தொலைபேசி இல்லாத வாழ்க்கைக்கு 100ஆயிரம் டாலர் பரிசு

(படம்:Pixabay)

குழந்தை முதல் பெரியவர் வரை பெரும்பாலோரிடம் தொலைபேசி இருக்கிறது.

காலையிலிருந்து இரவுவரை தொடுதிரையைப் பார்த்தே நேரம் செல்கிறது பலருக்கு.

அவசரநிலைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திறன்கருவி இப்போது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது.

உடன்வரும் நிழல்போலத் தொலைபேசியும் செல்லும் இடத்துக்கெல்லாம் கூடவே வருகிறது.

இருவரில் ஒருவர் தொலைபேசியின்றி வாழமுடியாது என்று கூறியிருப்பதாக அமெரிக்க ஆய்வொன்று குறிப்பிடுகிறது. 

ஐந்து வயதுப் பிள்ளைகூட தொலைபேசிக்கு அடிமையாகிவிட்டதாக அண்மையச் செய்திகள் கூறுகின்றன.

இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட கைகொடுக்கும் வகையில் போட்டி ஒன்றை நடத்துகிறது Glacéau Vitaminwater நிறுவனம்.

(படம்:Pixabay)

ஓர் ஆண்டுக்கு தொலைபேசியைப் பயன்படுத்தாமல் கட்டுப்பாடோடு இருப்பவருக்கு 100,000 டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

போட்டி நேற்று முன் தினம் (11 டிசம்பர்) தொடங்கிவிட்டது.

போட்டியில் பங்கெடுக்க Twitter, Instagramஇல் #nophoneforayear, #contest போன்ற வார்த்தைகளோடு படம் ஒன்றையும், எதற்காகப் பங்கெடுக்கிறார்கள் என்பதற்கான காரணத்தையும் பதிவுசெய்ய வேண்டும்.

(படம்:Twitter)

அன்புக்குரியவர்களுடன் உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்போவதாகப் பலர் கூறியிருக்கின்றனர்.

தொலைபேசி இல்லாமலும் ஒருகாலத்தில் மக்கள் வாழ்ந்தனர் என்பதைச் சிலர் நினைவூட்டினர். 

இப்போதெல்லாம் பெரும்பாலான நேரம் தொலைபேசியிலேயே செலவாகிறது. முற்றிலும் நிறுத்துவது சிரமமாக இருக்கலாம். ஆனால் பரிசுத் தொகை ஊக்கமாக அமையும்

என்கின்றனர் சிலர்.

  • உடற்பயிற்சியில் அதிகம் ஈடுபடலாம்
  • சுற்றுச்சூழலை ரசிக்கலாம்
  • குடும்பம், நண்பர்கள், செல்லப் பிராணிகளுடன் அதிக நேரத்தைச் செலவிடலாம்.
(படம்: Pixabay)

போட்டி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதிவரை தொடரும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்