Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் பாதாம்

பாதாம் ஞாபக சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும் என்ற கருத்து நீண்ட காலமாக நிலவி வருகிறது.

வாசிப்புநேரம் -
ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் பாதாம்

படம்: Pixabay

பாதாம் ஞாபக சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும் என்ற கருத்து நீண்ட காலமாக நிலவி வருகிறது.

பாதாம், பருப்பு வகையைச் சேர்ந்தது என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது பாதாம் மரத்திலிருந்து கிடைக்கும் ஒரு வகை பழம்.

தினமும் எட்டிலிருந்து பத்து ஊற வைத்த பாதாம்களைச் சாப்பிடுவதால் முளை வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

வைட்டமின் B6

பாதாமில் உள்ள வைட்டமின் B6, புரதச் சத்துகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் மூளை செல்லில் ஏற்பட்டுள்ள பழுதைச் சரி செய்யத் தேவையான புரதச் சத்தை அதிகரிக்கிறது.

துத்தநாகம் (Zinc)

தாதுப் பொருளான துத்தநாகம் (Zinc), நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி மூளை செல்களைப் பாதிக்கும் கிருமிகளிலிருந்தும் தொற்றுகளிலிருந்தும் காக்க உதவுகிறது.

புரதம்

மூளை செல்களைச் சரிசெய்ய உதவும் புரதம், ஞாபக சக்தி போன்ற ஆற்றல் செயல்பாடுகளையும் மேம்படுத்தப் பயன்படுகிறது.

வைட்டமின் E

வைட்டமின் E நினைவாற்றலைப் பாதிக்கும் மூளை செல்கள் வயதாகும் வேகத்தைக் குறைக்கிறது. வைட்டமின் E-ஐ அதிக அளவில் உட்கொள்ளாமல், தினசரி எட்டு பாதாம் என சிறிதளவில் சாப்பிட்டாலே பயன் தரும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்