Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

குழந்தைகளுக்குச் சமையல் வகுப்புகளா?

இந்தப் படத்தைப் பார்த்ததும், பிஞ்சுக் குழந்தைகள் கொஞ்சி அரவணைக்கப்பட வேண்டிய வயதில், அந்தக் குழந்தைகள் சமையல் பள்ளிக்குச் செல்வதா என்று நினைக்கவேண்டாம். 

வாசிப்புநேரம் -
குழந்தைகளுக்குச் சமையல் வகுப்புகளா?

படம்: Channel NewsAsia

சோல்: இந்தப் படத்தைப் பார்த்ததும், பிஞ்சுக் குழந்தைகள் கொஞ்சி அரவணைக்கப்பட வேண்டிய வயதில், அந்தக் குழந்தைகள் சமையல் பள்ளிக்குச் செல்வதா என்று நினைக்கவேண்டாம்.

படம்: Channel NewsAsia 

இது சமையல் வகுப்பல்ல. கை விரல் அசைவுகளை ஒருங்கிணைக்க ஊக்குவிக்கும் வகுப்பு.

இங்கு செல்லும் குழந்தைகளின் வயது மூன்றுக்கும் கீழ். தாயின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் கேரட்டுகளை வெட்டுவது எப்படி, சோற்று உருண்டைகளைப் பிசைவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்கின்றனர்.

வகுப்புகளின் வழி மொழித் திறனும் மேம்படுவதாக நம்பப்படுகிறது. இது போன்ற வகுப்புகள் தென் கொரியாவிலும் சிங்கப்பூரிலும் பிரபலம்.

போட்டித்தன்மை அதிகரித்துவிட்ட இக்காலத்தில் தவழும் குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகள் திறன்களைக் கற்றுக்கொண்டால்தான் எதிலும் முன்னணியில் இருக்கமுடியும் என்பது பெற்றோரின் நம்பிக்கை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்