Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நாய் வளர்ப்பதால் இந்த நன்மையும் இருக்கிறதா?

செல்லப் பிராணியாக நாய்களை வளர்ப்பவர்கள் வழக்கத்தைவிட அதிக அளவு உடற்பயிற்சி பெறுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
நாய் வளர்ப்பதால் இந்த நன்மையும் இருக்கிறதா?

படங்கள்: Reuters

செல்லப் பிராணியாக நாய்களை வளர்ப்பவர்கள் வழக்கத்தைவிட அதிக அளவு உடற்பயிற்சி பெறுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

பிறரோடு ஒப்பிடுகையில் நாய்களை வளர்ப்போர் சுமார் நான்கு மடங்கு அதிகமான அளவு உடற்பயிற்சியில் ஈடுபடுவதாகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

பிரிட்டனில் லிவர்ப்பூல் பல்கலைக்கழகமும் பிற நிலையங்களும் மேற்கொண்ட ஆய்வில் 385 வட்டாரங்களைச் சேர்ந்த 700 பேர் பங்கேற்றனர்.

அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நாய் வைத்திருந்தனர்.
வாராந்தர அடிப்படையில் அவர்களின் நடமாட்டம், நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.

சில குடும்பங்களின் நடமாட்டத்தைக் கவனிக்க கண்காணிப்புக் கருவிகளும் வழங்கப்பட்டன. அவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நாய்களை வைத்திருப்போர், நாய்கள் இல்லாதோரைவிட அதிகம் நடப்பது தெரியவந்தது.

நாய்க்குச் சொந்தக்காரர்கள் சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வது, மெதுவோட்டத்தில் ஈடுபடுவது போன்றவற்றிலும் அதிகம் ஈடுபட்டதாக ஆய்வை நடத்திய குழு சொன்னது.

நாய் வளரும் சூழலில் இருக்கும் பிள்ளைகளும் அதிக சுறுசுறுப்பாக ஓடி விளையாடுவதாக ஆய்வு கூறியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்