Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ரொக்கப் புழக்கம் அவ்வளவு எளிதில் மறையாது-மத்திய வங்கியாளர்கள்

கடன்பற்று அட்டைகள், ரொக்க அட்டைகள், திறன்பேசி வழி பணம் செலுத்தும் வசதி, முக அடையாளத்தின்மூலம் பணம் செலுத்தும் வசதி, மின்னிலக்க நாணயங்கள்-என ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைக்கு எத்தனையோ புதுப்புது வழிகள் உருவாகி வருகின்றன. 

வாசிப்புநேரம் -
ரொக்கப் புழக்கம் அவ்வளவு எளிதில் மறையாது-மத்திய வங்கியாளர்கள்

(படம்: Reuters)

ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை அதிகரித்துவந்தபோதும், ரொக்கப் பணத்தின் புழக்கம் அறவே நின்றுபோகும் அறிகுறிகள் தென்படவில்லை என்று மத்திய வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

BIS எனப்படும் அனைத்துலக சமரசத் தீர்வுகளுக்கான வங்கி, தனது காலாண்டு அறிக்கையில் அதுபற்றிய விவரங்களைத் தெரிவித்தது.

கடன்பற்று அட்டைகள், ரொக்க அட்டைகள், திறன்பேசி வழி பணம் செலுத்தும் வசதி, முக அடையாளத்தின்மூலம் பணம் செலுத்தும் வசதி, மின்னிலக்க நாணயங்கள்-என ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைக்கு எத்தனையோ புதுப்புது வழிகள் உருவாகி வருகின்றன.

இருந்தாலும், வளர்ந்த நாடுகள் சிலவற்றைத் தவிர்த்து, பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்திலுள்ள ரொக்கப் பரிவர்த்தனை தொடர்ந்து உயரவே செய்து வருவதாக, வங்கியின் பொருளியல் ஆலோசகரும் ஆய்வுப் பிரிவுத் தலைவருமான ஹியுன் சாங் ஷின் (Hyun Song Shin) குறிப்பிட்டார்.

உண்மையில், அண்மைக் காலத்தில் ரொக்கப் புழக்கம் அதிகரித்திருக்கிறது.

2000ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 விழுக்காடாக இருந்த ரொக்கப் புழக்கம், 2016-இல் 9 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு இடையிலும் ரொக்கப் புழக்கம் அதிகரித்து வருவது, பணம் செயல்படும் விதத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாகத் திரு.ஷின் சொன்னார்.

அதேவேளையில், கடன்பற்று அட்டை, ரொக்கக் கழிவு அட்டைகளின் பயன்பாடும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

மக்கள், அடிக்கடியும் சின்னச் சின்னச் செலவுகளுக்கும் அவற்றைப் பயன்படுத்துவதே அந்த உயர்வுக்குக் காரணம்.

சிங்கப்பூர் நாணய வாரியப் புள்ளிவிவரத்தின்படி, பண நோட்டுகளாகவும் காசுகளாகவும் இங்கு புழக்கத்திலுள்ள ஒட்டுமொத்த ரொக்கம்,
2016ஆம் ஆண்டில் 42.51 பில்லியன் வெள்ளியாக இருந்தது.

சென்ற ஆண்டு அது 45.79 பில்லியன் வெள்ளிக்கு உயர்ந்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்