Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நல்ல நிலையில் உள்ள பழைய ஆடைகள், புத்தகங்கள் - என்ன செய்வதென்று தெரியவில்லையா? வீச மனமில்லையா?

வீட்டில் நல்ல நிலையில் உள்ள, பயன்படுத்தாத பொருள்களை நம்மில் பலர் ஒரே பையில் வைத்து, குப்பையில் வீசுவதுண்டு.

வாசிப்புநேரம் -
நல்ல நிலையில் உள்ள பழைய ஆடைகள், புத்தகங்கள் - என்ன செய்வதென்று தெரியவில்லையா? வீச மனமில்லையா?

படம்: Pixabay

வீட்டில் நல்ல நிலையில் உள்ள, பயன்படுத்தாத பொருள்களை நம்மில் பலர் ஒரே பையில் வைத்து, குப்பையில் வீசுவதுண்டு.

சிலர் அதை மறுபயனீட்டுத் தொட்டிகளில் போட்டுவிடுகின்றனர்.

ஆனால், நல்ல நிலையில் உள்ள ஆடைகள், புத்தகங்கள், அறைகலன்கள் போன்ற சில பொருள்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், மற்றவர்கள் அவற்றில் பயன் காணலாம்.

பொருள்களை நன்கொடை செய்வதற்கென்றே சில இடங்கள் உள்ளன.

அவற்றில் சில....

Greensquare

  • மறுபயனீடு செய்யக்கூடிய நெய்த துணிகளைச் சேகரித்துவருகிறது.
  • நல்ல நிலையில் உள்ள பொருள்கள், வளர்ச்சி கண்டுவரும் நாடுகளின் சமூகச் சேவை அமைப்புகளுக்கு விற்கப்படுகின்றன. விற்கக்கூடிய நிலையில் இல்லாத பொருள்கள், மறுபயனீடு செய்யப்படும். அவை தொழிற்சாலைகளில் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் துணிகளாக மாற்றப்படுகின்றன.

மேல் விவரங்கள்: https://www.greensquare.com.sg/.

MINDS கடைகள்

  • அறிவுத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கும் MINDS இயக்கத்தின் கடைகளில் நன்கொடை செய்யப்பட்ட பொருள்கள் விற்கப்படுகின்றன.
  • விற்பனை மூலம் ஈட்டப்படும் தொகை, தொழிற்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு மாதாந்தரப் படித்தொகையையும் மதிய உணவுக்கான தொகையையும் வழங்கப் பயன்படுத்தப்படுகிறது.
  • ஆடைகள், காலணிகள், விளையாட்டுப் பொருள்கள், அறைகலன்கள், சமையலறைப் பொருள்கள் போன்றவற்றை நன்கொடையாக அளிக்கலாம்.

மேல் விவரங்கள்: https://www.se.minds.org.sg/minds-shop

SSVP Shop

  • ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஆடைகள், விளையாட்டுப் பொருள்கள், சமையலறைப் பொருள்கள், வீட்டு உபயோகச் சாதனங்கள் போன்றவற்றை விற்பனை செய்கிறது இந்தக் கடை.
  • விற்பனை மூலம் ஈட்டப்படும் தொகை, நிதியுதவி தேவைப்படுவோருக்கு வழங்கப்படுகிறது.

மேல் விவரங்கள்: https://www.facebook.com/SSVPSHOPSINGAPORE

Metta சமூகநல அமைப்பு

  • ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஆடைகள், தொழில்நுட்பக் கருவிகள், போன்றவற்றை நன்கொடையாக ஏற்றுக்கொள்கிறது அமைப்பு.
  • அமைப்பு, ஆடைகளை மறுபயனீட்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக அளிக்கும். எடைக்கு எடை அடிப்படையில், அது மறுபயனீட்டு நிறுவனத்திடமிருந்து நன்கொடை ஏற்றுக்கொள்ளும்.

மேல் விவரங்கள்: https://www.metta.org.sg/

H&M கடைகள்

  • பழைய நெய்த துணிகளையும் ஆடைகளையும் சேகரித்து வருகிறது.
  • அவை பின்னர் மறுபயனீடு செய்யக்கூடியவை, மீண்டும் பயன்படுத்தக்கூடியவை, மீண்டும் அணியக்கூடியவை என்று வகைப்படுத்தப்படுகின்றன.
  • நன்கொடை அளித்தோருக்கு 15 விழுக்காடு தள்ளுபடி வழங்கும் பற்றுச்சீட்டுகள் கொடுக்கப்படும்.

SG Mummies United Facebook குழு

  • சிரமங்களை எதிர்நோக்கும் தாய்மார்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் குழு செயல்படுகிறது.
  • உதவி தேவைப்படுவோருக்கு, குழந்தைகளுக்குத் தேவையான பொருள்களையும், வீட்டுக்குத் தேவையான பொருள்களையும் அளிக்கலாம்.
  • ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட சில பொருள்களையும் நன்கொடையாக அளிக்கலாம்.

மேல் விவரங்கள்: https://www.facebook.com/groups/sgmummiesunited/

Salvation Army அமைப்பு

  • நல்ல நிலையில் உள்ள ஆடைகள், அறைகலன்கள், சமையலறைப் பொருள்கள் போன்றவற்றை நன்கொடையாக ஏற்றுக்கொள்ளும்.
  • பொருள்கள் பின்னர் அதன் கடைகளில் விற்கப்படும். அதன் மூலம் ஈட்டப்படும் தொகை, அறநிதிக்கு வழங்கப்படும்.

மேல் விவரங்கள்: https://www.salvationarmy.org/singapore/dik_fts

One Bag One Book இயக்கம்

  • Zakir Hossain Khokan எனும் வெளிநாட்டு ஊழியர், சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் சக ஊழியர்களுக்கான நூல் பகிர்வுத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.
  • ஊழியர்கள் சொந்த நாட்டிலிருந்து வெகு தூரத்தில் இருந்தாலும், நூல்களைப் படிக்க வாய்ப்பு அளிப்பதன் மூலம் சற்று ஆறுதல் அளிக்க விரும்புகிறார் அவர்.
  • ஆங்கிலம், தமிழ், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் உள்ள புத்தகங்களை அவர் நன்கொடையாக ஏற்றுக்கொள்வார்.

மேல் விவரங்கள்: https://www.facebook.com/onebagonebook/

தேசிய நூலக வாரியம், Books Beyond Borders போன்ற இடங்களுக்கும் நல்ல நிலையில் உள்ள புத்தகங்களை நன்கொடையாக அளிக்க முடியும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்