Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தண்ணீரை நின்றுகொண்டே குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்

நமது உடலைச் சீராக வைத்திருப்பதில் தண்ணீர் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால் அதை அருந்தும்போது சரியான நிலையில் தான் அருந்துகிறோமா என்பது தான் கேள்வி.

வாசிப்புநேரம் -

நமது உடலைச் சீராக வைத்திருப்பதில் தண்ணீர் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால் அதை அருந்தும்போது சரியான நிலையில் தான் அருந்துகிறோமா என்பது தான் கேள்வி.

தண்ணீரை நின்றுகொண்டே குடிப்பதால் உடலில் சில பிரச்சினைகள் ஏற்படுவதாக சில மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

தண்ணீரை நின்றுகொண்டே குடிக்கும்போது அது வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தி, குடல் பகுதிகளைப் பாதிப்பதாகவும், தண்ணீரில் இருக்கும் சத்துக்களை உடல் ஏற்க மறுப்பதாகவும் ஆயுர்வேதம் கூறுகிறது.

அதே வேளையில் தண்ணீரில் அதிக அழுத்தம் இருக்கும், அது சிறுநீர்ப்பையில் அழுக்குகளைச் சேர்க்கலாம், அதனால் சிறுநீரகம் பாதிப்படையலாம்.

சில நேரங்களில் அவ்வாறு குடிக்கும்போது அது மூட்டுவலியையும் உண்டாக்கலாம்.

தண்ணீரை நின்றுகொண்டே குடிக்கும் போது அது காற்று மற்றும் உணவுக் குழாய்க்கு உயிர்வாயு செல்வதைக் கட்டுப்படுத்தலாம்.

இது தொடர்ந்து நடந்து வந்தால் அது நுரையீரல், இதயப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்: அமர்ந்து கொண்டு தண்ணீர் குடிப்பது நல்லது, இது தண்ணீரைக் குடலில் மெதுவாகச் செலுத்தி, நீரைச் செரிக்கவைத்து, நரம்புகளைத் தளர்வாக்கி உடலைச் சீராக வைத்திருக்க உதவுமாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்