Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முகத்தைத் தொடாமல் இருப்பது எப்படி?

முகத்தைத் தொடாமல் இருப்பது எப்படி?

வாசிப்புநேரம் -
முகத்தைத் தொடாமல் இருப்பது எப்படி?

படம்: REUTERS

COVID-19 கிருமித்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளில் முகத்தை அடிக்கடி தொடாமல் இருப்பதும் ஒன்று.

சராசரியாக ஒரு நாளில் சுமார் 3,000 முறை நாம் முகத்தைத் தெரியாமல் தொடுவதாகத் கூறப்பட்டுள்ளது. அத்தகைய நிலையில் எப்படி முகத்தைத் தொடும் பழக்கத்தைத் தவிர்ப்பது?

1) ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டிருங்கள்

வேலையில் தட்டச்சு செய்வது, எழுதுவது போன்றவற்றைச் செய்யும் போது முகத்தைத் தொடுவது குறையும். விரல்களைக் கொண்டு தாளம் போடுவது, விரல்களை ஒன்றுடன் ஒன்று பிணைத்து வைத்திருப்பது போன்றவற்றைச் செய்துபார்க்கலாம்.

2) டிஷ்யூ தாளைப் பயன்படுத்துங்கள்

முகம் அரிக்கிறதா? அல்லது கண்களில் தூசு விழுந்துவிட்டதா? டிஷ்யூ தாளைப் பயன்படுத்தி அதைச் சரி செய்யுங்கள். பின்னர் அதை வீசிவிடுங்கள்.

(படம்: Pixabay)

3) முகத்தைத் தொடும் காரணங்களைக் கண்டறிந்து அதைத் தீர்க்கவும்.

கண்கள் வறண்ட நிலையில் அவற்றைக் கசக்கும் பழக்கம் இருந்தால் கண்களுக்குச் சொட்டு மருந்தைப் பயன்படுத்தலாம். சருமம் அரித்தால் களிம்புகளைப் பயன்படுத்தலாம்.

4) நண்பரின் உதவியை நாடலாம்.

சில நேரங்களில் நம்மை நாமே அறியாமல் முகத்தைத் தொடுவதுண்டு. எப்போதெல்லாம் முகத்தைத் தொடுகிறீர்களோ அப்போது நண்பர்கள் உங்களைத் தடுக்கலாம். அல்லது முகத்தைத் தொடும் நபர் ஒவ்வொரு முறையும் சவால் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை உருவாக்கலாம்.

5) தொழில்நுட்பத்தின் உதவியை நாடலாம்.

Donottouchyourface.com போன்ற இணையப்பக்கம், கணினியில் உள்ள கேமரா மூலம் நாம் முகத்தை எப்போது தொடுகிறோம் என்பதைக் கண்காணிக்கிறது. முகத்தைத் தொடும் போது அது எச்சரிக்கை ஒலி ஒன்றை எழுப்பும். அல்லது, கைத்தொலைபேசியில் நினைவூட்டும் வகையில் கடிகார மணியைப் பயன்படுத்தலாம்.

கோப்புப்படம்: REUTERS/AFP

6) முகத்தைத் தொடாமல் இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்காதீர்கள்

எப்போதும் முகத்தைத் தொடாமல் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், முகத்தைத் தொடவேண்டும் என்ற எண்ணமும் எப்போதும் இருக்கும். முகத்தைத் தொடுவது குறித்து அதிகம் பதறாமல் கைகளைச் சவர்க்காரம் கொண்டு நன்கு கழுவி, சுகாதாரமான பழக்கவழக்கங்களைக் கையாளலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்