Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'தண்ணீர் குடிங்க பாஸ்' - சோடா பானத்தை ஒதுக்கிய காற்பந்து நட்சத்திரம்; சரிந்தது Coca-Cola பங்கு விலை

போர்ச்சுகலின் பிரபலக் காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), யூரோ 2020 ஊடகச் சந்திப்பின்போது 2 Coca-Cola போத்தல்களை ஒதுக்கி வைத்ததை அடுத்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலை சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

நேற்று முன்தினம் (ஜூன் 14), ஹங்கேரியுடனான (Hungary) யூரோ காற்பந்து ஆட்டத்திற்கு முன், 36 வயது ரொனால்டோ ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அப்போது, தம் அருகில் இருந்த Coca-Cola போத்தல்களை அவர் ஒதுக்கி வைத்துவிட்டு, தண்ணீர் போத்தலைத் தூக்கிக் காட்டினார்.

போர்த்துக்கீசிய மொழியில் ஆகுவா அதாவது தண்ணீர் என்று அவர் முழக்கமிட்டார்.

தண்ணீரைத் தேர்ந்தெடுக்குமாறு அவர் ஊக்குவிப்பது போல் அது அமைந்திருந்தது.

அதை அடுத்து, Coca-Cola நிறுவனத்தின் பங்கு விலை உடனடியாக 1.6 விழுக்காடு சரிந்ததாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது.

அதன் சந்தை மதிப்பு 4 பில்லியன் டாலர் குறைந்து, 238 பில்லியன் டாலரானது.

ரொனால்டோவின் செயல் பற்றிக் கருத்துரைத்த Coca-Cola, எல்லாருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும் என்று சொன்னதாக The Guardian குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்