Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மது நச்சால் மரணமடைய இருந்தவரை மதுவால் காப்பாற்றிய மருத்துவர்கள்

மது நச்சால் மரணமடைய இருந்த ஆடவரை மதுவாலேயே காப்பாற்றியுள்ளனர் வியட்நாமிய மருத்துவர்கள்.

வாசிப்புநேரம் -
மது நச்சால் மரணமடைய இருந்தவரை மதுவால் காப்பாற்றிய மருத்துவர்கள்

( படம்: REUTERS )

மது நச்சால் மரணமடைய இருந்த ஆடவரை மதுவாலேயே காப்பாற்றியுள்ளனர் வியட்நாமிய மருத்துவர்கள்.

நுயென் வான் நாட் (Nguyen Van Nhat) எனும் 48 வயது ஆடவர் மது நச்சால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரின் இரத்தத்தில் மெத்தனால் எனும் வேதிபொருள் வழக்கமான அளவை விட 1,119 மடங்கு அதிகமாக இருந்தது.

கல்லீரல் மெத்தனால் பதனீடு செய்யும் வேகத்தைக் குறைக்க அவரது வயிற்றில் ஒரு லிட்டர் பீர் ஏற்றப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு கேன் பீர் ஏற்றப்பட்டது.

இறுதியில் 15 கேன் பீர்களை நுயென் உடலில் ஏற்றிய பிறகு அவருக்கு நினைவு திரும்பியது.

நுயென் தற்போது உடல்நிலை தேறிவருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மதுவில் மெத்தனால், எத்தனால் வேதிபொருள்கள் கலந்திருக்கும். மது அருந்தும்போது அவை இரத்தத்தில் கலக்கும். சிலநேரம் மெத்தனால் இரத்தத்தில் அதிகமாகக் கலக்கும் போது அது ஆபத்தாக முடியும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்