Images
  • girls
    (படம்: REUTERS)

பற்பசை, ஒப்பனை, சோப் போன்றவற்றால் சிறுமியர் முன்னதாகவே பருவமடையும் அபாயம்

நியூயார்க்: தாய் கருவுற்றிருக்கும்போது பயன்படுத்தும் பற்பசை, ஒப்பனை, சோப் போன்றவற்றால், அந்நேரம் கருவில் இருக்கும் பெண் சிசுக்கள் பிறந்து வளரும்போது முன்னதாகவே பருவமடையும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ஆய்வு கூறுகிறது.

சிறுமியர் குறித்த காலத்துக்கு முன்னரே பருவமடைவதற்கு, நறுமணம் கொண்ட பொருள்களில் இருக்கும் phthalates, phenols, parabens போன்ற இரசாயனப் பொருள்கள்  காரணமாக இருக்கலாம் என்கிறது ஆய்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

338 பிள்ளைகளிடையே பிறப்பிலிருந்து இளமைப் பருவம் வரை நடத்தப்பட்டது ஆய்வு.

பிள்ளைகள் கருவில் இருந்த போது அவர்களின் அன்னையரிடமும், 9 வயதிலிருந்து 13 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒன்பது மாதத்துக்கு ஒரு முறை பிள்ளைகளிடமும் அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் சோதிக்கப்பட்டன.

கருவில் இருந்தபோது இரசாயனப் பொருட்களை எதிர்கொண்ட ஆண் குழந்தைகளுக்கு எவ்விதப் பாதிப்புகளும் தெரியவில்லை. ஆனால் பெண் பிள்ளைகள் சுமார் 10 வயதிலேயே பருவமடைவதாகத் தெரியவந்தது.  

Top