Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

எந்த நாடுகளின் உணவுகள் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கின்றன?

உலகளவில் வெளியாக்கப்படும் பசுமைக்கூட வாயுக்களில் சுமார் கால் பகுதி உணவு தயாரிப்பிலிருந்து வருகிறது. உணவை வீணாக்குவதால் கூடுதல் 8 விழுக்காடு பசுமைக்கூட வாயுக்கள் வெளியாக்கப்படுகின்றன.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: சுமார் 1 நிமிடம்)

உலகளவில் வெளியாக்கப்படும் பசுமைக்கூட வாயுக்களில் சுமார் கால் பகுதி உணவு தயாரிப்பிலிருந்து வருகிறது. உணவை வீணாக்குவதால் கூடுதல் 8 விழுக்காடு பசுமைக்கூட வாயுக்கள் வெளியாக்கப்படுகின்றன.

இந்த போக்கினால் எதிர்காலத்தில் சுமார் 800 மில்லியன் பேர் உணவின்றி தவிப்பர் என்று நியூ யார்க் டைம்ஸ் நாளேடு கூறியுள்ளது.

சில நாடுகளோ சுற்றுப்புறத்துக்கு ஏற்ற வகையில் உணவைத் தயாரித்து வருகின்றன.

வியட்நாம்

இந்நாட்டு மக்களின் உணவில் மாமிசம் அதிகம் இருப்பதில்லை, காய்கறி தானிய வகைகளுக்கு மெருகூட்டும் வகையில் அது சேர்க்கப்படுகிறது.

வியட்நாமியர்கள் அமெரிக்கர்களை விட மூன்றில் ஒரு பங்கு மாமிசத்தைச் சாப்பிட்டு வருகிறார்கள்.

இந்தியா

பருப்பு, தானிய வகைகள் அதிகமாக உண்ணப்படும் இந்தியாவின் உணவு சுற்றுப்புறத்துக்கு நன்மை விளைவிக்கிறது.

பருப்பு, தானியங்கள் கடுமையான வானிலை சுற்றுசூழலிலும் வளர்கின்றன. அத்துடன் அவற்றைப் பயிரிடுவதால் மண்ணின் தரமும் மேம்படுகிறது.

லெபனான்

இங்கு உணவு எப்போது பகிரப்பட்டு உண்ணப்படுகிறது. மற்றவர்களுடன் உண்ணும் போது உணவு அதிகம் வீணாக்கப்படுவதில்லை.

அத்துடன் மற்றவர்களுடன் சாப்பிடும்போது, நாம் மெதுவாக உண்பதால் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதில்லை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்