Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Moisturisersஐக் குளிக்கும் நீரில் சேர்த்துக்கொள்வதால் சிரங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளுக்குப் பயன் இல்லை: ஆய்வு

ஒரு வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்ட 482 பிள்ளைகள் ஆய்வில் கலந்துகொண்டனர். 

வாசிப்புநேரம் -
Moisturisersஐக் குளிக்கும் நீரில் சேர்த்துக்கொள்வதால் சிரங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளுக்குப் பயன் இல்லை: ஆய்வு

(படம்: Joe Raedle/Getty Images/AFP)

சிரங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகள் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் moisturisers-ஐக் குளிக்கும் நீரில் சேர்த்துக்கொள்வதால் பயன் ஏதுமில்லை என்கிறது இங்கிலந்து ஆய்வு ஒன்று.

ஒரு வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்ட 482 பிள்ளைகள் ஆய்வில் கலந்துகொண்டனர்.

சிறு வயதில் பிள்ளைகள் சிரங்கால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு வழக்கமாக பரிந்துரைக்கப்படும் களிம்பு உள்ளிட்ட மருந்துகளைத் தவிர்த்து குளியல் நீரில் moisturisers-ஐச் சேர்க்கும் அவசியமில்லை என்று ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

குளியல் நீரில் சேர்க்கப்படும் moisturisers சிறிது நேரம் தான் சிரங்கால் ஏற்படும் அரிப்புத் தொல்லையைத் தணிக்க உதவும் என்று ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்