Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மின் - தூண்டுதல் மூலம் முதியோரின் நினைவாற்றலை அதிகரிக்கலாம்

வயது ஏற, ஏற மறதி ஏற்படுவது இயல்பு. சில சமயங்களில் முடிவெடுக்கத் தேவைப்படும் முக்கியத் தகவல்கள் நினைவுக்கு வராமல் முதியோர் தடுமாறுவர்.

வாசிப்புநேரம் -
மின் - தூண்டுதல் மூலம் முதியோரின் நினைவாற்றலை அதிகரிக்கலாம்

படம்: Pixabay/The Digital Artist

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

வயது ஏற, ஏற மறதி ஏற்படுவது இயல்பு. சில சமயங்களில் முடிவெடுக்கத் தேவைப்படும் முக்கியத் தகவல்கள் நினைவுக்கு வராமல் முதியோர் தடுமாறுவர்.

அத்தகைய நிலை இனி மாறக்கூடும். மின்-தூண்டுதலால் மூளையின் ஆற்றலை அதிகரிக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

60களில் இருக்கும் முதியோரின் நினைவாற்றலை, 20முதல் 30ஆண்டு இளைய நபரின் நினைவாற்றல் அளவிற்கு மேம்படுத்துவது அதனால் சாத்தியமாகும்.

வருங்காலத்தில், முதுமை மறதி நோய்க்குத் தீர்வுகாணவும் அது உதவக்கூடும்.

பிரிட்டனில் வெளியாகும் Nature Neuroscience எனும் அறிவியல் சஞ்சிகை அந்தத் தகவலை  வெளியிட்டுள்ளது.

மின்-தூண்டுதலுக்கு EEG தொழில்நுட்பம் கைகொடுத்துள்ளது. தொப்பி போன்ற சாதனத்தை முதியோர் அணிந்துகொள்வர்.

அதன் மூலம், ஒரு குறிப்பிட்ட தாளலயத்தில் துல்லியமான மின்-அதிர்வுகள் அனுப்பப்படும்.

நினைவாற்றலுக்குக் காரணமான மூளையின் 2 முக்கியப் பகுதிகளை அவை தூண்டிவிடும்.

அரை மணி நேரத்திற்குப் பிறகு, ஆய்வில் கலந்துகொண்ட முதியோரால், திரையில் அடுத்தடுத்துக் காட்டப்பட்ட படங்களில் மாற்றம் இருந்தால் அடையாளம் காணமுடிந்தது.

மின்-தூண்டுதலின் பலனை முக்கால் மணி நேரத்துக்கும் மேல் அவர்கள் உணர்ந்தனர்.

நினைவாற்றல் தொடர்பான மேம்பட்ட ஆய்வுக்கு அது வழிவகுக்குமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்