Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முகக்கவசம் அணிந்து பேசும்போது எவ்வாறு உணர்வுகளைக் காட்டலாம்?

நம்மில் பெரும்பாலானோர் கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க முன்வைக்கப்பட்டுள்ள விதிமுறைகளைச் சரிவர பின்பற்றிவருகிறோம்.

வாசிப்புநேரம் -

நம்மில் பெரும்பாலானோர் கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்க முன்வைக்கப்பட்டுள்ள விதிமுறைகளைச் சரிவர பின்பற்றிவருகிறோம்.

முகக்கவசம் அணியும் போது நாம் பிறரிடமிருந்து ஆறடி தள்ளி நிற்கிறோம்.

பொதுவாக, நாம் போகும் இடங்களிலும் தெரிந்தவர்களைக் காணும்போதும், அவர்களைப் பார்த்துப் புன்னகை புரிவது வழக்கம்.

ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையிலோ அவ்வாறு செய்வது சாத்தியமல்ல. முகக்கவசம், நமது புன்னகையை மறைக்கிறது.

அதற்கான தீர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறார் மிசிசிப்பி மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Mississippi State University) பேச்சு மற்றும் விவாதக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஷெரில் சேம்பர்ஸ் (Cheryl Chambers).


1. கண்கள்


முகக்குறிகளின் மூலம் ஒருவரின் உணர்வுகளைக் கண்டறியலாம். அதில் ஒரு பாகத்தை மறைக்கும்போது, உணர்வுகளைக் கண்டறிவது கடினமாகிறது.

எனினும், உங்கள் கண்களைக் கொண்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். பிறரிடம் பேசும்போது அவர்களது கண்களைப் பார்த்துப் பேசினால், நம்பிக்கையையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்தலாம்.


2. உடற்குறிப்பு (Body language)


கைகளை அசைப்பது, நேரே நிற்பது, போன்றவற்றை உடற்குறிப்பு என்போம். பல்வேறு உடற்குறிப்புகளைக் கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.

நம்மிடம் பேசுவோரின் உடற்குறிப்பைக் கவனித்து அதைப் போலவே உடற்குறிப்பு காட்டும் போது அவர்களுக்கு நம் மீது நல்ல அபிப்பிராயம் உண்டாகும்; அவர்களது உடன்பாட்டைப் பெறுவது சுலபமாகும்.


3. குரல்


குரலின் மூலம் உணர்ச்சிகளைக் காட்டுவது சுலபம். முகக்கவசம் அணியும் போது அதில் மேலும் கவனம் செலுத்துவது நல்லது.

குரலில் ஏற்ற இறக்கம், அசைவுகள், பேச்சின் வேகம் ஆகியவை ஒருவரின் எண்ணங்களை வெளிப்படுத்தும்.


முகக்கவசம் அணியும்போது பாதி முகம் மட்டும் தான் மறைகிறது. குரல், கண்கள், உடற்குறிப்பு போன்றவற்றைக் கொண்டு உங்கள் எண்ணங்களைத் தெளிவாக வெளிக்காட்டலாமே!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்