Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடற்பயிற்சிக்கு உகந்த நேரம் உண்டா?

COVID-19 சூழலில் உலகில் பலரும் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள். வேலைகளைக் கூட இருந்த இடத்திலிருந்தே, கணினியில் வைத்த கண் வாங்காமல் செய்கிறார்கள். நம் ஆரோக்கியத்தை மனத்தில் கொண்டு, உடற்பயிற்சி மேற்கொள்வது நன்மை அளிக்கும். 

வாசிப்புநேரம் -
உடற்பயிற்சிக்கு உகந்த நேரம் உண்டா?

(படம்: Unsplash/rawpixel)

COVID-19 சூழலில் உலகில் பலரும் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள். வேலைகளைக் கூட இருந்த இடத்திலிருந்தே, கணினியில் வைத்த கண் வாங்காமல் செய்கிறார்கள். நம் ஆரோக்கியத்தை மனத்தில் கொண்டு, உடற்பயிற்சி மேற்கொள்வது நன்மை அளிக்கும்.

சரி...உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பது நமக்குத் தெரியும். எந்த நேரத்தில் செய்யவேண்டும் என்பது தெரியுமா?

உடற்பயிற்சி குறித்த ஓர் புதிய ஆய்வின்படி, சிலருக்கு உடற்பயிற்சி செய்வதற்கென்று உகந்த நேரங்கள் உண்டு. இனிப்பு நீர் வர அதிக அபாயம் உள்ள ஆண்களை ஆய்வு ஆராய்ந்தது. பகலில் உடற்பயிற்சி செய்தோரின் ஆரோக்கியம், மற்ற நேரங்களில் உடற்பயிற்சி செய்தோரின் ஆரோக்கியத்தை விட சிறப்பாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளும் நம் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும். அதனால், நம்முடைய இருபத்தி நான்கு மணி நேர உடல் கடிகாரத்தை தொந்தரவு செய்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

உதாரணத்திற்கு, இரவு பணியாற்றுவோரின் தூங்கும் பழக்கங்கள் தலைகீழாக இருக்கும். அதனால், அவர்கள் உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவுப் பிரச்சினை ஆகியவற்றுக்கு ஆளாக அதிக வாய்ப்புண்டு.

இரவு தாமதமாக உணவு உண்போருக்கும் இதே நிலை தான். இருப்பினும், ஆறுதல் ஊட்டும் ஆய்வுகள், உண்ணும்-உறங்கும் நேரங்களை மாற்றினால் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறுகின்றன.

2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், இரண்டாம் வகை நீரிழிவுப் பிரச்சினை கொண்ட ஆண்களுக்கு பிற்பகல் நேரத்தில் பயிற்சி செய்தபோது, ரத்த இனிப்பு அளவு கணிசமாகக் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாறாக இந்த உடற்பயிற்சியை காலையில் மேற்கொண்டால் ரத்த இனிப்பு அளவு ஆரோக்கியமற்ற நிலைக்குச் சென்றது.

எது எப்படியோ.... உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதைவிட ஏதோ ஒரு நேரத்தில் செய்வது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சி செய்வதில் பலன் பெற அதைத் தொடர்ந்து செய்வதும் அவசியம் என்பது அவர்கள் கருத்து. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்