Images
  • Expensive Habits
    (படம்: Pixabay)

சிறுசிறு பழக்கங்கள்... கைவிடுவதால் எவ்வளவு சேமிக்கலாம்? தெரிந்துகொள்ளுங்கள்!


'Bubble Tea' பானம் அருந்தும் பழக்கத்தைக் கைவிடுவதன் வழி தாய்லந்துக்குச் சென்று வரும் அளவிற்குப் பணம் சேமிக்கமுடியும் என்று நினைத்துப்பார்த்திருக்கிறீர்களா?

ஆனால் மலேசியாவைச் சேர்ந்த வியுவி லிம் (Wewwy Lim) என்பவர் அதைத்தான் செய்திருக்கிறார்.

மலேசியாவில், 4 முதல் 5 வெள்ளி விலையுள்ள 'Bubble Tea'யை வாரத்திற்கு இருமுறை அருந்தும் பழக்கமுள்ளவர் அவர்.

ஆனால், நான்கு மாத காலம் சிரமப்பட்டு அதைத் தொடாமல் கட்டுப்பாட்டுடன் இருந்தார்.

விளைவு ? சுமார் 140 வெள்ளி சேமிப்பு...

அந்தப் பணத்தைக் கொண்டு தாய்லந்திற்கு இருவழி விமானப் பயணச்சீட்டை வாங்கியிருக்கிறார் லிம்.

மலேசியாவில் வெளியாகும் சீன நாளேடான China Press அதனைத் தெரிவித்தது.

சில பழக்கங்களுக்கு அதிகப் பணம் செலவாவதில்லை என்றே நமக்குத் தோன்றும்.

ஆனால் அவற்றை முடிந்தவரை தவிர்ப்பதால் காலப்போக்கில் கணிசமான தொகையைச் சேமிக்கமுடியும்.

1. Bubble Tea பானம்


விலை: சுமார் $5.00 - $6.00

வாரம் இருமுறை Bubble Tea அருந்தினால், $12.00 செலவாகும்.

ஓராண்டுச் செலவு: $576.00

இந்தப் பணத்தைச் சேமித்தால் உயர்தர சைக்கிளை வாங்கலாம்.

2. கடைகளில் போத்தல் குடிநீர் வாங்குவது


வீட்டிலேயே போத்தலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு வெளியே செல்வோர் வெகு சிலர். பெரும்பாலானவர்கள் காசு கொடுத்து போத்தல் தண்ணீரையே வாங்குகிறார்கள்.

அதனால் எவ்வளவு வீண் செலவு செய்கிறோம்?

600 மில்லி லிட்டர் போத்தல் குடிநீரின் சராசரி விலை: $0.50 - $1.00

பொதுப் பயனீட்டுக் கழகத் தகவல்படி 600 மில்லி லிட்டர் குழாய் நீரின் விலை: 0.1 காசு

ஒவ்வொரு நாளும் இரண்டு போத்தல் தண்ணீர் வாங்கினால், செலவு: சுமார் $2.00 வெள்ளி

ஓராண்டுச் செலவு: $730.00

இந்தப் பணத்தைக் கொண்டு சுய மேம்பாட்டுக்கான SkillsFuture அல்லது மற்ற வகுப்புகளில் நீங்கள் பதிவு செய்துகொள்ளலாம்.

3. நகத்துக்கு வண்ணம் பூசும் Mani-Pedi சேவைகள்


கட்டணம் : சுமார் $70

கால், கைகளுக்கு வண்ணம் பூசுவதைப் பெரும்பாலான பெண்கள் மாதம் ஒருமுறை செய்வார்கள்.

அதற்கான ஓராண்டுச் செலவு: $840

அந்தத் தொகையைக் கொண்டு புதிய iPhone 8 வாங்கிக்கொள்ளலாம்.

4. விலையுயர்ந்த காப்பி


விலை : $6.00 - $7.00

ஒவ்வொரு நாளும் இத்தகைய காப்பியை அருந்தினால் ஒரு வாரத்திற்கான செலவு: 49 வெள்ளி

ஓராண்டுச் செலவு: $2,352.00 

அந்தத் தொகையைக் கொண்டு உங்கள் அன்புக்குரியவருடன் ஐரோப்பாவுக்கு உல்லாசப் பயணம் சென்று வர விமானப் பயணச்சீட்டுகள் வாங்கலாம்.

5. சிகரெட்


ஒரு பொட்டலத்தின் விலை: சுமார் $10 

அதிகம் புகைபிடிப்பவர்கள் ஒரு நாளுக்கு ஒரு பொட்டலமாவது வாங்குவார்கள்.

ஓராண்டுச் செலவு: $3,360

சிறிய அளவிலான வர்த்தகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசையா?

3,360 வெள்ளியைக் கொண்டு உங்கள் நீண்ட கால ஆசையைப் பூர்த்தி செய்யலாம்.

6. வேலைக்கு ஒவ்வொரு நாளும் டாக்ஸி/ தனியார் வாடகைக் கார்கள் வழி பயணம் செய்வது


சராசரியாக ஒரு வழிப் பயணம்: $15.00 - $20.00

நாளொன்றுக்கு இரு வழிப் பயணம்: சுமார் $40.00

ஒரு மாதத்திற்கு 20 நாள் வேலை செய்யும் கணக்குப்படி, ஓராண்டுச் செலவு: $9,600 

இந்தத் தொகையைக் கொண்டு வீட்டு அடைமானக் கடனில் ஒரு பகுதியைச் செலுத்தி நிம்மதியடையலாம்.  

Top