Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பல வகை முகக்கவசங்கள்...அவற்றுள் சிறந்தது எது?

கிருமிப்பரவலை முறியடிப்பதற்கு முகக்கவசம் அணிவது முக்கியம் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
பல வகை முகக்கவசங்கள்...அவற்றுள் சிறந்தது எது?

(படம்: AFP)

கிருமிப்பரவலை முறியடிப்பதற்கு முகக்கவசம் அணிவது முக்கியம் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், பல வகையான முகக்கவசங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அவற்றுள் எந்த வகையான முகக்கவசம் கிருமித்தொற்றிலிருந்து அதிகப் பாதுகாப்பு அளிக்கின்றது?

எளிதில் கிடைக்கக்கூடிய 14 வகையான முகக்கவசங்களைக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது அமெரிக்காவின் டியூக் (Duke) பல்கலைக்கழகம்.

பருத்தியால் செய்யப்பட்ட முகக்கவசங்களைவிட, மருத்துவ முகக்கவசங்கள் மேம்பட்ட பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்தது.

பாலாக்லாவா (Balaclava), பண்டானா (Bandana) வகையான முகக்கவசங்கள் போதிய பாதுகாப்பு அளிப்பது இல்லை என்று ஆய்வு காட்டியது.

முன்னிலை ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய N-95 முகக்கவசங்கள் நீர்த்துளிப் பரவலை 0.1 விழுக்காட்டுக்கும் கீழ் குறைத்தன.

அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்ற முகக்கவசங்கள் நீர்த்துளிப் பரவலை சுமார் 90 விழுக்காடுவரை குறைத்தன.

பருத்தித் துணியால் செய்யப்பட்டவை, எத்தனை அடுக்கு துணி இருக்கின்றது என்பதைப் பொறுத்து, 70 முதல் 90 விழுக்காடுவரையிலான நீர்த்துளிப் பரவலைக் குறைத்தன.

ஆனால், பண்டானாக்கள் நீர்த்துளிப் பரவலை சுமார் 50 விழுக்காடு மட்டுமே குறைத்தன.

கழுத்தோடு சேர்த்தவாறு அணியப்படும் முகக்கவசங்களோ நீர்த்துளிப் பரவலை அதிகரித்ததாக ஆய்வு குறிப்பிட்டது.

ஆய்வின் முடிவுகள், அரசாங்கங்களின் முகக்கவசங்கள் தொடர்பான திட்டத்தை மாற்றி அமைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்