Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

WhatsApp உரையாடல் குழுவில் யார் தங்களைச் சேர்த்து கொள்ளலாம் என்பதை இனி தீர்மானிக்கலாம்

WhatsApp உரையாடல் குழுவில் யார் தங்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை வாடிக்கையாளர்கள் இனி முடிவுசெய்யலாம்.

வாசிப்புநேரம் -
WhatsApp உரையாடல் குழுவில் யார் தங்களைச் சேர்த்து கொள்ளலாம் என்பதை இனி தீர்மானிக்கலாம்

கோப்புப் படம்: REUTERS/Thomas White

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

WhatsApp உரையாடல் குழுவில் யார் தங்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை வாடிக்கையாளர்கள் இனி முடிவுசெய்யலாம்.

தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு தொடர்பில் வாடிக்கையாளர்களிடையே அச்சம் அதிகரித்துவரும் வேளையில், அந்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளது WhatsApp.

உரையாடல் குழுவில் ஒருவரைச் சேர்க்கும்முன்னர், அவரைக் குழுவில் இணைப்பதற்கான அழைப்பை WhatsApp தனிப்பட்ட முறையில் அந்த நபருக்கு அனுப்பும்.

அந்த அழைப்பு மூன்று நாள்களுக்குள் காலாவதியாகிவிடும். உரையாடல் குழுவில் சேர்வது சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்தைப் பொறுத்தது. 

WhatsApp சேவை தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சியாக இந்தப் புதிய நடவடிக்கை அமைகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்