Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்களை எவ்வாறு பராமரிப்பது?

சிங்கப்பூர் அரசாங்கம் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்களை அண்மையில் விநியோகித்தது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் அரசாங்கம் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்களை அண்மையில் விநியோகித்தது.

வெளியே செல்லும்போது முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, பலர் அவற்றைத்தான் பயன்படுத்துகின்றனர்.

அவற்றை எவ்வாறு பராமரிப்பது? எப்போதெல்லாம் அவற்றைக் கழுவவேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கு Shifa Clinic & Surgery மருந்தகத்தின் மருத்துவர் கஸாலியிடமிருந்து பதில்களைக் கேட்டறிந்தது 'செய்தி'.

முகக் கவசங்களைக் கழுவுவது அவசியமா?

  • அவசியம்...Surgical masks எனும் அறுவைச் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் முகக் கவசங்களுடன் ஒப்பிடுகையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிக் கவசங்களில் நீர் படியாமல் இருப்பதற்கான அம்சம் ஏதுமில்லை.

"பேசும்போது வெளியாகும் எச்சில் அல்லது நீராவி, முகக் கவசம் மீது படிந்தால், அதன் வழி, கிருமி தொற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அவற்றைக் கழுவவேண்டும்."

முகக் கவசங்களை எப்போதெல்லாம் கழுவவேண்டும்?

  •  முகக் கவசத்தைப் பயன்படுத்திய அடுத்த நாள் அதைக் கழுவுவது சிறந்தது.

அவற்றை எப்படிக் கழுவவேண்டும்?

  • முகக் கவசங்களை 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் சலவைத் தூளுடன் சேர்த்துக் கழுவலாம்.
  • அவற்றை 10 நிமிடத்துக்குத் தண்ணீரில் ஊறவைப்பது சிறந்தது.
  • சலவை செய்யும் இயந்திரத்தில் மற்ற துணிகளோடு முகக் கவசங்களைத் துவைக்கலாமா?
  • செய்யலாம். வேண்டுமென்றால், சிறிதளவு Bleach திரவத்தையும் பயன்படுத்தலாம்.

முகக் கவசங்களை எப்படிக் காயவைப்பது?

  • அவற்றைச் சூரிய வெளிச்சத்தில் காயவைப்பது சிறந்தது. கிருமியை அழிக்க, அதிக வெப்பநிலை அவசியம்.
  • -மற்ற வழிகளில் காய வைத்தால், முழுமையாகக் காயந்துவிட்டதா என்பதை உறுதிசெய்யவேண்டும். இல்லையென்றால், முகக் கவசத்தில் உள்ள ஈரத்தின் வழி கிருமி தொற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

முகக் கவசங்களை எத்தனை நாள்களுக்குப் பயன்படுத்தலாம்?

  • முகக் கவசங்கள் நன்றாக இருக்கும்வரை, அவற்றைப் பயன்படுத்தலாம்.
  • அவற்றில் ஓட்டைகள் உருவானால், முகக் கவசத்தைப் பயன்படுத்தக்கூடாது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்