Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முகக்கவசம் அணிவதால் ஏற்படும் வாய்த் துர்நாற்றம்...என்ன காரணம்? எப்படித் தீர்ப்பது?

முகக்கவசம் அணியும்போது நம் வாயிலிருந்து வரும் நாற்றத்தை நம்மால் சுவாசிக்க முடிகின்றது.

வாசிப்புநேரம் -
முகக்கவசம் அணிவதால் ஏற்படும் வாய்த் துர்நாற்றம்...என்ன காரணம்? எப்படித் தீர்ப்பது?

(படம்: REUTERS/Andrew Kelly)

முகக்கவசம் அணியும்போது நம் வாயிலிருந்து வரும் நாற்றத்தை நம்மால் சுவாசிக்க முடிகின்றது.

வாய்த் துர்நாற்றம் முகக்கவசம் அணிவதால் ஏற்படுகிறதா, இயற்கையாகவே ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

இதைக் கண்டுபிடிக்க உங்கள் முகக்கவசத்தை அகற்றி, வாய்க்கு முன் கைகளை வைக்கவும். கைகளுக்குள் ஊதவும். அப்போது துர்நாற்றம் ஏற்படவில்லை என்றால், அது முகக்கவசத்தால் ஏற்பட்டுள்ளது.

கைகளில் துர்நாற்றம் உள்ளதென்றால், உங்களுக்கு இயற்கையாகவே வாய்த் துர்நாற்றம் உண்டு என்று பொருள் கொள்ளலாம்.

சில நேரங்களில், உடலில் நோயிருந்தால் அவ்வாறு வாய்த் துர்நாற்றம் ஏற்படும்.

அதிகப் புரதச் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால் (Ketosis):

  • இனிப்பு மிக்க, பழத்தைப் போன்ற நாற்றம்

நீரிழிவு நோய் :

  • நகச்சாயத்தை அகற்றும் ரசாயனத்தைப் போன்ற நாற்றம்

சுவாச அமைப்பு சார்ந்த நோய்:

  • துர்நாற்றம் மிக்க நெஞ்சுச்சளியுடன் கூடிய இருமல்

கல்லீரல் பிரச்சினை:

  • அழுகிய முட்டை, பூண்டு போன்ற நாற்றம்

சிறுநீரகத்தில் பிரச்சினை:

  • அமோனிய ரசாயனத்தைப் போன்ற நாற்றம்

வாய்த் துர்நாற்றத்திற்குத் தீர்வு:

  • பல் பரிசோதனையை வருடத்தில் 2-3 முறையாவது செய்யவும்
  • பற்களைத் துலக்குவதோடு, அவற்றின் இடையே இருக்கக்கூடிய அழுக்கை Floss எனப்படும் பற்கயிற்றைக்கொண்டு சுத்தம் செய்து, நாக்கையும் சுத்தம் செய்யவும்
  • உணவில் குடைமிளகாய், புரோக்கொளி, கொத்தமல்லியைச் சேர்க்கவும்
  • சீனி, மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்கவும்
  • நிறைய தண்ணீர் குடிக்கவும்

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்