Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடற்பயிற்சி செய்தாலும் எடையைக் குறைக்கமுடியவில்லையா?

எடையைக் குறைக்கவேண்டும் என்ற வெறியில் உடற்பயிற்சி செய்வதுண்டா?

வாசிப்புநேரம் -
உடற்பயிற்சி செய்தாலும் எடையைக் குறைக்கமுடியவில்லையா?

(படம்: Pixabay)


எடையைக் குறைக்கவேண்டும் என்ற வெறியில் உடற்பயிற்சி செய்வதுண்டா?

எவ்வளவு எடை குறைந்துள்ளது என்று ஆவலாகப் பார்க்கும்போது, எதுவும் குறையவில்லையே என்று ஏமாற்றம் அடைந்ததுண்டா?

இதைப் பற்றி The New York Times நாளேடு எழுதியுள்ளது.

உடற்பயிற்சி செய்வது எடையைக் குறைக்க நல்ல வழி. அப்படியென்றால் ஏன் எடை குறையவில்லை?


- அளவுக்கு மீறிச் சாப்பிடும்போதும், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும்போதும், உடற்பயிற்சியின்போது இழந்த கலோரிகள், மீண்டும் சேர்ந்து கொள்ளும்.

கலோரிகள் மீண்டும் சேர்வதை எப்படித் தவிர்ப்பது?
- உடற்பயிற்சிக்குப் பிறகு, அளவுக்கு மீறிச் சாப்பிடுகிறீர்களா, சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கிறீர்களா என்பதைக் கவனிக்கவேண்டும்.
- தின்பண்டம் ஏதாவது சாப்பிட எண்ணினாலும் அதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்

சாப்பிடுவதில் கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே செய்யும் உடற்பயிற்சியின் பலன் தென்படும். எடையும் குறையும் என்று The New York Times நாளேடு தெரிவித்துள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்