Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வெள்ளையின தேசியவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஆதரிக்கும் பதிவுகளுக்குத் தடைவிதிக்கும் Facebook

வெள்ளையின தேசியவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் பிரதிநிதித்து ஆதரிக்கும் போக்கிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தனது சமூகத் தளங்களில் தடுத்துநிறுத்தப்போவதாக Facebook நிறுவனம் அறிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
வெள்ளையின தேசியவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஆதரிக்கும் பதிவுகளுக்குத் தடைவிதிக்கும் Facebook

(படம்: REUTERS/Dado Ruvic/Illustration/File Photo)

வெள்ளையின தேசியவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் பிரதிநிதித்து ஆதரிக்கும் போக்கிற்கு எதிரான நடவடிக்கைகளைத் தனது சமூகத் தளங்களில் தடுத்துநிறுத்தப்போவதாக Facebook நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி Facebook, Instagram ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் அத்தகைய தகவல்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்படும் என்றது Facebook.

நியூஸிலந்தின் இரண்டு பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியவர் அதனை நேரலையாக ஒளிபரப்பியதைத் தொடர்ந்து Facebook நிறுவனம் கடும் நெருக்குதலுக்கு உள்ளானது.

இதற்கு முன்னர் வெள்ளையின தேசியவாத அல்லது பிரிவினைவாதக் கருத்துகளை இனவாதச் சிந்தனையாக அது கருதவில்லை.

Facebook நிறுவனத்தின் அந்த முயற்சியை நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன்(Jacinda Ardern) வரவேற்றுள்ளார்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்