Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமானத்தில் மறைந்திருக்கும் அம்சங்கள். உங்களுக்குத் தெரியுமா?

விமானப் பயணம் இந்தக் காலத்தில் வெகு சாதாரணம். உல்லாசப் பயணமோ, வேலை தொடர்பான பயணமோ... பலரின் விருப்பமான தெரிவு விமானப் பயணமே.

வாசிப்புநேரம் -
விமானத்தில் மறைந்திருக்கும் அம்சங்கள். உங்களுக்குத் தெரியுமா?

படம்: Pixabay

விமானப் பயணம் இந்தக் காலத்தில் வெகு சாதாரணம். உல்லாசப் பயணமோ, வேலை தொடர்பான பயணமோ... பலரின் விருப்பமான தெரிவு விமானப் பயணமே.

உங்கள் அடுத்த பயணத்தின்போது விமானத்திலிருக்கும் இந்த அம்சங்களை மறக்காமல் கவனியுங்கள்!

1. கூடுதல் இருக்கை இடத்திற்கான பொத்தான்

நீண்டதூரப் பயணத்தின்போது கழிப்பறைக்குப் போக வசதியாக இருக்கும் என்று பலர் நடைபாதையை ஒட்டிய இருக்கையில் உட்கார விரும்புவார்கள்.  நடைபாதை அருகிலிருக்கும் இருக்கையைத் தேர்ந்தெடுக்க மற்றுமொரு காரணமும் உண்டு. கை வைக்கும் பகுதியில் ஒரு பொத்தான் மறைந்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி அப்பகுதியை நகர்த்துவதன் மூலம் உங்களுக்கு இருக்கையில் கொஞ்சம் கூடுதல் இடம் கிடைக்கும்.

2. விமானத்தில் நடக்கும்போது பயன்படுத்தக்கூடிய கைப்பிடி

விமானத்தில் நடந்துசெல்லும்போது ஊழியர்கள் கூரையைத் தொட்டுக்கொண்டே செல்வதை நீங்கள் கண்டிருக்கலாம். விமானத்தில் பைகள் வைக்கப்படும் மேற்பகுதி பிடிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருப்பது இதற்குக் காரணம். இனி விமானத்தில் நடந்து செல்லும்போது மற்ற பயணிகளின் இருக்கைகளைப் பிடித்து நடக்காமல் அவற்றைப் பயன்படுத்தலாம்.

3. விமான இறக்கையிலிருக்கும் கொக்கிகள்

விமானத்தில் உட்கார்ந்தவாறு சன்னல் வழியே அதன் இறக்கையைப் பார்க்கும்போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் சிறு கொக்கிகளைப் பார்க்க முடியும்.

அவசர நேரங்களில் விமானம் நீர்ப்பகுதிகளில் தரையிறங்க நேரிடலாம்.

அவ்வாறு இறங்கும்போது விமானத்தின் இறக்கைகள் ஈரமாகின்றன. இதனால் தப்பித்து செல்ல முயற்சிக்கும் பயணிகளுக்குச் சிரமமாக இருக்கும்.

இந்நேரத்தில் பயணிகள் பிடித்துக்கொண்டு நடப்பதற்கு கொக்கிகளில் கயிறு கட்டப்பட்டிருக்கும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்