Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பிரபலங்களிடையே பிரபலமாக இருக்கும் மடக்குத் (Flip) தொலைபேசிகள்

இது திறன்பேசிகளின் காலம்! ஆனால் இன்றைய காலகட்டத்திலும் பழைய மடக்குத் (“ஃபிளிப்”) தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர் பலர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வாசிப்புநேரம் -

இது திறன்பேசிகளின் காலம்! ஆனால் இன்றைய காலகட்டத்திலும் பழைய மடக்குத் (“ஃபிளிப்”) தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர் பலர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நோக்கியா, சோனி எரிக்ஸன், மோடரோலா போன்ற நிறுவனங்கள் இன்றும் “ஃபிளிப்” தொலைபேசிகளை உற்பத்தி செய்கின்றன; அவை சந்தைகளில் விற்கப்படுகின்றன. இவற்றின் விலை சராசரியாக ஐம்பது வெள்ளியிலிருந்து இருநூறு வெள்ளி வரை உள்ளது.

இவற்றைச் சிலர் விரும்பிப் பயன்படுத்துவதற்கான காரணம்?

மடக்குத் தொலைபேசிகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், தனித்தன்மை வாய்ந்த செயல்கூறுகள், மலிவான விலை போன்றவை இத்தகைய தொலைபேசிகளைப் பலர் பயன்படுத்துவதற்குக் காரணங்களாக இருக்கின்றன. முக்கியமாக...

-அவை எளிதாக உடையாமல் இருக்கின்றன;
-அவற்றை அடிக்கடி மின்னூட்டம் செய்வதற்கான தேவையில்லாமல் இருக்கிறது;
-அவற்றைப் பயன்படுத்துவதால், அதிகமாகக் கவனம் சிதறாமல் இருக்கிறது;

இருந்தாலும், ‘ஃபிளிப்' தொலைபேசிகளைப் பயன்படுத்தும் சிலர், கையடக்கக் கருவிகளையும் ஒரு சில நேரங்களில் பயன்படுத்துவதுண்டு.

முதலீட்டு ஜாம்பவான் வாரன் பஃபெட், அமெரிக்க முன்னைய அதிபர் பராக் ஒபாமா, பாடகி ரிஹானா, நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸன், அமெரிக்கத் தொலைக்காட்சிப் பிரபலம் கிம் கார்டாஷியன் ஆகியோர் இவர்களில் சிலர்.

நட்சத்திரங்கள் மட்டுமா? இளையர்களும் “ஃபிளிப்” தொலைபேசிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

நீங்கள் இத்தகைய மடக்குத் தொலைபேசிகளுக்கு மாறத் தயாராக இருக்கிறீர்களா?  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்