Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முகக்கவசம் அணியும்போது மூச்சுக்காற்று மூக்குக்கண்ணாடியை மங்கலாக்குவதைத் தவிர்க்க முடியுமா?

உலகின் பல இடங்களில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மூக்குக்கண்ணாடி அணிகின்றனர். சமீபத்தில் அத்தகையோர் எதிர்நோக்கும் ஒரு பொதுவான சிக்கல்...

வாசிப்புநேரம் -
முகக்கவசம் அணியும்போது மூச்சுக்காற்று மூக்குக்கண்ணாடியை மங்கலாக்குவதைத் தவிர்க்க முடியுமா?

(படம்: Pixabay)

உலகின் பல இடங்களில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மூக்குக்கண்ணாடி அணிகின்றனர்.

சமீபத்தில் அத்தகையோர் எதிர்நோக்கும் ஒரு பொதுவான சிக்கல்...

முகக்கவசம் அணிந்திருக்கையில் மூக்குக் கண்ணாடி மீது மூச்சுக்காற்று படுவதால் கண்ணாடி அடிக்கடி மங்கலாகிறது.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

  • மருத்துவ முகக்கவசத்தின் மேல்பகுதியிலுள்ள உலோகக் கம்பியை மூக்கின் வடிவத்துக்கேற்ப இறுக்கப் பொருத்தலாம்.
  • துணியாலான முகக்கவசங்களைப் பயன்படுத்துவோர் பிளாஸ்டிக் துண்டுகளை முகக்கவசத்தின் மேல் பகுதியில் இணைத்து மூக்கின் வடிவத்துக்கேற்ப இறுக்கிப் பொருத்தலாம்.
  • முகக்கவசத்தின் காதுப்பகுதிகளிலுள்ள கயிற்றை இறுக்கக் கட்டலாம்.
  • மருத்துவப் பயன்பாட்டுக்கான ஒட்டுநாடாவைக் கொண்டு முகக்கவசத்தை மூக்கின் மேல்பகுதியுடன் ஒட்டலாம்.
  • முகக்கவசத்தைக் கூடியவரை மேல்நோக்கி இழுத்து, கண்களுக்குக் கீழ் வரும்படி அணிந்து, அதன்மேல் கண்ணாடியை அணியலாம்.

மேற்கொண்ட வழிமுறைகள் உதவவில்லையென்றால் என்ன செய்யலாம்? 

மூக்குக்கண்ணாடியைச் சவர்க்கார நீரில் கழுவி அப்படியே உலர விடலாம்; அவ்வாறு செய்வதனால் கண்ணாடி மேல் படியும் மெல்லிய திரை மூச்சுக்காற்றால் கண்ணாடி மங்குவதைத் தவிர்க்கக்கூடும்.

அதுவும் பலனளிக்கவில்லை என்றால் ...?

கண்ணாடியை ரசாயனம் கலந்த துடைக்கும்தாள் கொண்டு சுத்தம் செய்யலாம். ஆனால் செலவு கூடும். 

எதுவுமே உங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால்....

நீங்கள் உங்கள் மூக்குக்கண்ணாடியைக் காதுப்பகுதியிலிருந்து சற்றே முன்னே தள்ளி அணியலாம். ஆனால் அதனால் கண்பார்வைத் திறன் மோசமடையக்கூடும்.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்