Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விமானப் பயணத்தின்போது தவிர்க்கவேண்டிய உணவு வகைகள்

விமானத்தில் பயணம் செய்யும் போது சாதாரணமாகவே தண்ணீர்ச் சத்து குறைந்து உடல் வறட்சி உண்டாகும்.அப்போது மதுபானங்களை அருந்தினால் அது மேலும் உடலை வறட்சியடையச் செய்யும்.

வாசிப்புநேரம் -
விமானப் பயணத்தின்போது தவிர்க்கவேண்டிய உணவு வகைகள்

படம்: Pixabay

மதுபானங்கள்:

விமானத்தில் பயணம் செய்யும் போது சாதாரணமாகவே தண்ணீர்ச் சத்து குறைந்து உடல் வறட்சி உண்டாகும்.அப்போது மதுபானங்களை அருந்தினால் அது மேலும் உடலை வறட்சியடையச் செய்யும்.

குறுகலான இடத்தில் நீண்டநேரம் உட்காரும்போது சிலருக்கு, இரத்தம் உறைந்து கட்டிகள் உருவாகக்கூடும். அப்படிப்பட்டோர் மது அருந்துவது, அந்த ஆபத்தை அதிரிக்கும்.

உலர் பழங்கள்:

உலர் பழவகைகள் சிலவற்றில், அவற்றைக் கெட்டுப் போகாமல்  பதப்படுத்தும் இரசாயனம் கலந்திருக்கும். அது, ஆஸ்துமா கோளாறு உள்ளவர்களுக்கு ஆஸ்துமாவைத் தூண்டிவிடக்கூடும்.

ஏற்கனவே விமானத்துக்குள் உயிர்வாயு வழக்கத்தைவிடக் குறைவாக இருக்கும். அந்தச் சூழலில், ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்து நேரலாம்.

ஆகவே, உலர் திராட்சை, உலர் ஆப்ரிகாட் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

காப்பி:

விமானப் பயணத்திற்கு முன் நீங்கள் அருந்தும் காப்பி, பயணத்தின்போது உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டலாம்.

இதற்காக நீங்கள் உங்கள் இருக்கையைவிட்டு அடிக்கடி எழுந்து செல்வது, சக-பயணிகளுக்குத் தொந்தரவாக அமையலாம்.

மேலும் காப்பியிலுள்ள கஃபைன் இரசாயனம், உங்களைத் தேவையற்ற பரபரப்பில் ஆழ்த்தும்.

பாலாடைக் கட்டி கலந்துள்ள உணவு வகைகள்:

பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, பாலாடைக் கட்டி கலந்த உணவு வகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி மூச்சுத் திணறலை உருவாக்கலாம்.

விமானம் 35,000 அடிக்குமேல் பறக்கும்போது உயிர்வாயு குறைவாக இருக்கும். அது மூச்சுத் திணறலை மேலும் மோசமாக்கலாம்.

வெங்காயம், பூண்டு கலந்த உணவுகள்:

விமானப் பயணத்தின்போது வெங்காயம், பூண்டு கலந்த உணவு வகைளைத் தவிர்ப்பது நல்லது.

ஏனென்றால் அவ்வகை உணவுகள் சுவாச துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை. இதனால் சக பயணிகளுக்குத் தொந்தரவாக இருக்கலாம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்