Images
  • fruit and veg

பழங்களும் பச்சைக் காய்கறிகளும் சாப்பிடும் ஆண்களுக்கு அதிக நன்மை

பழங்களையும் பச்சைக் காய்கறிகளையும் அதிக அளவில் உட்கொள்ளும் ஆண்களுக்கு ஒரு நற்செய்தி!

எதிர்காலத்தில் அறிவாற்றல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கும் சாத்தியம் குறையும் என்று அண்மைய அமெரிக்க ஆய்வொன்று கூறுகிறது.

ஆய்வில் சுமார் 28,000 ஆண்கள் பங்கேற்றனர். 20 ஆண்டுகாலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 51ஆவது வயது முதல் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

நான்காண்டுக்கு ஒருமுறை அவர்கள் உட்கொள்ளும் பழங்கள், காய்கறிகள், இதர உணவுவகைகள் ஆகியவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. 73ஆவது வயதில் நினைவாற்றல், சிந்திக்கும் திறன் ஆகியவற்றில் அவர்கள் சோதிக்கப்பட்டனர்.

அதிகக் காய்கறிகளை உட்கொண்ட ஆண்கள் அறிவாற்றல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கியது 17 விழுக்காடு குறைந்து காணப்பட்டது ஆய்வில் தெரியவந்தது.

Neurology சஞ்சிகையில் அந்த ஆய்வு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.  

Top