Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

படத்தைக் காட்டி முடி வெட்டியதால்....

முடியை அழகாக வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது நம்மில் பலரின் ஆசை.

வாசிப்புநேரம் -
படத்தைக் காட்டி முடி வெட்டியதால்....

(படம்:Tianxiu bot/Weibo)

முடியை அழகாக வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது நம்மில் பலரின் ஆசை.

பிரபலங்களின் சிகை அலங்காரப் படங்களைப் பார்த்து அதே போல் நாமும் முடியை வெட்டிக்கொள்ள வேண்டும் என்றும் பலர் நினைப்பதுண்டு.

இதனால், சிகை அலங்காரம் செய்பவர்களிடம் பிரபலங்களின் படத்தையோ, காணொளியையோ காட்டுவோம்.

அவரும் முடிந்த வரை அதே போல் வெட்டப் பார்ப்பார்.

ஆனால் சீனாவில் சற்று வித்தியாசமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஆடவர் ஒருவர் சிகைப் பராமரிப்பாளரிடம் காணொளிக் காட்சி ஒன்றைக் காண்பித்து அதில் வரும் பிரபலம் போலவே முடியை வெட்டச் சொன்னார்.

சிகைப் பராமரிப்பாளரோ நேர்த்தியாக வேலையைச் செய்பவர்.

ஆடவர் காண்பித்த படத்தைப் போலவே அச்சுப் பிசகாமல் முடியை வெட்டியிருக்கிறார்..

ஆனால் வெட்டிக்கொண்ட ஆடவருக்கு பெருத்த ஏமாற்றம்.

சிகைப் பராமரிப்பாளர் தமது கடமையில் கொஞ்சம் அதிகமாக மூழ்கி, ஆடவர் காண்பித்த காணொளிக் காட்சியில் தெரிந்த PLAY பொத்தான் சின்னத்தையும் சேர்த்து, அதுபோலவே முடியை வெட்டியுள்ளார்.

ஆடவர் காணொளியை நிறுத்தியபோது படத்தின் முன்வந்து நின்றது PLAY சின்னம். அதை ஒரு புது ரக சிகை அலங்காரம் என்று நினைத்து சிகை அலங்காரம் செய்பவர் முடியை வெட்ட, அது நகைச்சுவையான சம்பவமாக மாறியது.

தற்போது சம்பவம் குறித்த தகவல் இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்