Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஊழியர்கள் கட்டாயம் 11 மணி நேரம் ஓய்வு பெற வேண்டும்...எங்கே?

ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 11 மணி நேரம் தடையில்லாத, வேலைத் தொந்தரவு இல்லாத ஓய்வு.

வாசிப்புநேரம் -
ஊழியர்கள் கட்டாயம் 11 மணி நேரம் ஓய்வு பெற வேண்டும்...எங்கே?

கோப்புப்படம்: REUTERS/AFP

ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் 11 மணி நேரம் தடையில்லாத, வேலைத் தொந்தரவு இல்லாத ஓய்வு.

வேலைநேரம் முடிந்த பின்னும் அலுவலகத்தில் வேலை செய்வது அங்கு வழக்கத்துக்கு மாறான ஒன்று.

ஓய்வுநேரத்தின் போது வேலை தொடர்பான ஒரு மின்னஞ்சலைப் படித்தாலோ, சக ஊழியருடன் வேலைதொடர்பில் தொலைபேசியில் பேசினாலோ, 11 மணி நேரத்தின் கணக்கு முதலிலிருந்து மீண்டும் தொடங்கும்.

நம்ப முடியவில்லையா?

இதுதான் ஜெர்மனியில் பெரும்பாலான ஊழியர்களின் வாழ்க்கைமுறை.

மருத்துவமனை ஊழியர்கள், விவசாயிகள், ஊடகத் துறையினர் போன்றோர் தங்கள் ஓய்வுநேரத்தை 10 மணி நேரமாகக் குறைத்துக்கொள்ளலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் இந்த நடைமுறை இருந்தாலும், ஜெர்மனியில் இது சட்டமாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜெர்மானியர்களின் இந்த வேலை-வாழ்க்கைச் சமநிலையைத் திறன்பேசிகளின் வருகை சற்றுத் தகர்த்துள்ளது.

முதலாளிகள் பலர் தங்கள் ஊழியர்களை எல்லா நேரங்களிலும் தொடர்புகொள்வதை விரும்புகிறார்கள்.

ஊழியர்களைப் பாதுகாக்கும் சட்டமாக இருந்தாலும்,ஊழியர்கள் உட்படப் பலரும் தடையற்ற 11 மணி நேர ஓய்வு மிகவும் அதிகம் என்றே குறைகூறுகின்றனர்.

தங்களுக்கு ஏற்றவாறு வேலை நேரத்தை அமைத்துக்கொள்வதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்