Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கிருமிகள் சேரும் இடங்கள் வீட்டில் எங்கே?

கிருமிகள் சேரும் இடங்கள் வீட்டில் எங்கே?

வாசிப்புநேரம் -
கிருமிகள் சேரும் இடங்கள் வீட்டில் எங்கே?

(படம்: Pixabay)

1) சமைத்து முடித்தவுடன் பாத்திரங்கள், பானைகள் ஆகியவற்றைக் கழுவ பயன்படுத்தப்படும் பஞ்சில் ஆக அதிகமான அளவில் கிருமிகள் சேர்கின்றன.

அந்தப் பஞ்சை நீண்டகாலத்திற்குப் பயன்படுத்தாமல் அடிக்கடி மாற்றுவது நல்லது. பயன்படுத்தப்பட்ட பஞ்சுகளை எலுமிச்சம்பழச் சாற்றில் கழுவலாம்.

நுண்ணலை அடுப்பில் பஞ்சை 2 நிமிடங்களுக்கு வைத்து அதன் பிறகு அவற்றைப் பாத்திரங்களைக் கழுவும் இயந்திரத்தில் கழுவினால், பஞ்சு சுத்தமடையும்.

2) சமையலறை நீர்த்தொட்டி
சுத்தம் செய்யும் பஞ்சுகளுக்கு அடுத்ததாக சமையலறையின் குழாய்த்தொட்டிகளில் கிருமிகள் ஆக அதிக அளவில் சேர்கின்றன.

ஒவ்வொரு நாளும் தொட்டியைப் பயன்படுத்திய பின் வெந்நீரால் அதைச் சுத்தம் செய்யலாம்.

3) காய்கறிகள், பழங்கள், இறைச்சி ஆகியவற்றை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பலகையிலும் கிருமிகள் சேர்கின்றன.

பாத்திரங்களைக் கழுவும் இயந்திரத்தில் அதைக் கழுவலாம். அல்லது, வினிகர் (vinegar) தெளித்து அதை இரவு முழுவதும் ஊறவைக்கலாம். அல்லது நுண்ணலை அடுப்பில் 30 விநாடிகளுக்கு வைத்து சுத்தம் செய்யலாம்.

4) பல் துலக்கியில் கிருமிகள் சேர வாய்ப்புள்ளது.

குளியலறையில் Toilet bowl இருக்கும் இடத்திற்கு நேர் எதிரில் பல் துலக்கியை வைக்கலாம். கிருமி எதிர்ப்புத் திரவத்தில் பல்துலக்கியை ஊற வைக்கலாம். நோய்வாய்ப்பட்டால் அதன் மாற்றுவது நல்லது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்