Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

வாழ்க்கைமுறை நோய்களுக்கு எதிரான போர்

உலகச் சுகாதாரத் தலைவர்கள் வாழ்க்கைமுறை நோய்களுக்கு எதிரான போரை முடுக்கிவிட்டுள்ளனர். புகையிலை, மதுபானம், குளிர்பானம் ஆகியவை ஏழ்மையில் இருப்போரை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அவர்கள் சுட்டினர்.

வாசிப்புநேரம் -
வாழ்க்கைமுறை நோய்களுக்கு எதிரான போர்

படம்: AFP/Oscar Siagian

உலகச் சுகாதாரத் தலைவர்கள் வாழ்க்கைமுறை நோய்களுக்கு எதிரான போரை முடுக்கிவிட்டுள்ளனர். புகையிலை, மதுபானம், குளிர்பானம் ஆகியவை ஏழ்மையில் இருப்போரை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அவர்கள் சுட்டினர்.

அதே வேளையில், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வரி விதிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் தலைவர்கள் முன்வைத்தனர்.

ஏழ்மைக்கும் தொற்று மூலம் பரவாத நோய்களுக்கும் தொடர்பு உள்ளதாய் The Lancet சுகாதார சஞ்சிகை வல்லுநர்கள் தெரிவித்தனர். பக்கவாதம், நீரிழிவு ஆகியவை அவற்றில் அடங்கும். 

தொற்று மூலம் பரவாத நோய்கள் ஆண்டுதோறும் ஏற்படும் 38 மில்லியன் மரணங்களுக்குக் காரணமாக இருப்பதாய் உலகச் சுகாதார நிறுவனம் கூறியது. அதில் சுமார் பாதி, 70 வயதை அடையும் முன்னர் ஏற்படுபவை.

அந்த மரணங்கள் பெரும்பாலும் புகைப்பிடித்தல், அளவிற்கு மீறி மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுமுறை ஆகியவற்றால் நிகழ்பவை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்