Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இன்று Google அங்கீகரிக்கும் இந்தியப் பெண் யார்?

இன்று நீங்கள் Google தேடுதளத்துக்குச் சென்றால் அங்கு புடவையணிந்த ஒரு இந்திய பெண்ணின் சித்திரத்தைக் காணலாம்.

வாசிப்புநேரம் -

இன்று நீங்கள் Google தேடுதளத்துக்குச் சென்றால் அங்கு புடவையணிந்த ஒரு இந்திய பெண்ணின் சித்திரத்தைக் காணலாம்.

அந்தப் பெண்ணின் பெயர் ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி.

அவர்தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்.

153 ஆண்டுகளுக்கு முன் இன்று ஆனந்தி, யமுனா என்ற பெயரில் மகாராஷ்டிராவில் பிறந்தார்.

ஆனந்திக்கு ஒன்பது வயதாகியபோது மனைவியை இழந்த 29 வயது ஆடவருடன் அவருக்கு மணமுடிக்கப்பட்டது.

14 வயதில் ஆனந்தி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ஆனால் முறையான மருத்துவப் பராமரிப்பு இல்லாததால் அந்தக் குழந்தை 10 நாட்களிலேயே இறந்தது.

இந்தச் சம்பவம் மருத்துவம் பயில ஆனந்தியைத் தூண்டியது.

ஆனந்தியின் கணவரும் அவரது இலக்கை அடைய ஆதரித்தார்.

ஆனந்தி மருத்துவம் கற்கத் தனியாக அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார்.

அன்றைய காலக்கட்டத்தில் ஆனந்தியின் முடிவு சமூகத்தில் பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இருப்பினும் அயராது முயன்று, மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்றார் 21 வயது ஆனந்தி.

அவர் மருத்துவப் பட்டம் பெற்றபோது, அதை விக்டோரியா மகாராணி பாராட்டினார்.

மீண்டும் இந்தியா திரும்பிய ஆனந்தி ஆல்பர்ட் எட்வார்ட் மருத்துவமனையில் பெண்களுக்கென உள்ள பிரிவில் மருத்துவராகப் பணிபுரிந்தார்.

ஆனால், அமெரிக்காவின் குளிர்ந்த பருவநிலையாலும், பழக்கமில்லாத உணவாலும் ஆனந்தி காசநோயால் பாதிக்கப்பட்டார்.

26 பிப்ரவரி 1887 அன்று 22 வயதாவதற்கு முன்னரே ஆனந்தி காசநோய்க்குப் பலியானார்.

உயர்கல்வி கற்க, இந்தியப் பெண்களுக்கு உத்வேகம் அளித்த முதல் இந்தியப் பெண் மருத்துவர் ஆனந்தி.

அவரை அங்கீகரிக்கிறது இன்றைய Google Doodle.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்