Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Android பயனீட்டாளர்களுக்கு, விளம்பரதாரர்களின் கண்காணிப்பைத் தடுப்பதற்கான மென்பொருளை வழங்கவிருக்கும் Google நிறுவனம்

Android கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவோருக்கு, விளம்பரதாரர்களின் கண்காணிப்பைத் தடுக்கும் தெரிவை வழங்கவிருப்பதாக Google நிறுவனம் அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

Android கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவோருக்கு, விளம்பரதாரர்களின் கண்காணிப்பைத் தடுக்கும் தெரிவை வழங்கவிருப்பதாக Google நிறுவனம் அறிவித்துள்ளது.

போட்டி நிறுவனமான Apple அத்தகைய நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது.

iPhone பயன்படுத்துவோரின் தனிநபர் அந்தரங்கத்தை மேலும் பாதுகாப்பாக வைத்திருப்பது நோக்கம் என்று அது கூறியது.

Android பயனீட்டாளர்களுக்கு அந்தத் தெரிவு இவ்வாண்டின் பிற்பகுதியில் வழங்கப்படும் என்று Google தெரிவித்தது.

இருப்பினும், Android பயனீட்டாளர்கள் அந்தத் தெரிவைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே, அவர்கள் விளம்பரதாரர்களால் கண்காணிக்கப்பட மாட்டார்கள்.

அத்தகைய பயனீட்டாளர்களுக்கு, தனிநபர் விவரங்களைச் சேகரித்து உருவாக்கப்படும் விளம்பரங்கள் அனுப்பி வைக்கப்பட மாட்டா.

-BLOOMBERG

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்