Images
  • google
    (படம்:Reuters/Stephen Lam/File Photo)

Google மொழிபெயர்ப்புச் சொற்களில் ஆண்பால் பெண்பால் வேறுபாடுகளைக் குறைக்க முயற்சி

கூகள் நிறுவனம் அதன் மொழிபெயர்ப்புச் சேவையில் வழங்கப்படும் சொற்களில் ஆண்பால்,பெண்பால் வேறுபாடுகளைக் குறைக்கும் முயற்சிகளை எடுத்துவருகிறது.

பிரஞ்சு, போர்ச்சுகிஸ், ஸ்பானிய மொழிகளில் உள்ள சொற்களுக்கு மொழிபெயர்ப்பு செய்யும்போது அவை பெரும்பாலும் ஆண்பாலுக்கு ஏற்றவாறு வழங்கப்படுவதாகக் குறைகூறல் நிலவியது.

செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் திரட்டப்படும் தகவல்களில் பாலின பாகுபாட்டைக் குறைக்கும் முயற்சி இந்த ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது

என்றது கூகள்.



 

Top