Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

திராட்சையில் இத்தனை நன்மைகளா?

திராட்சைப்பழம் பல வண்ணங்களில் கிடைக்கும்; அதுபோல்தான் அவற்றின் நன்மைகளும். அப்படியென்ன நன்மைகள்? பார்ப்போமே!

வாசிப்புநேரம் -

எளிதில் கிடைக்கக் கூடிய பழவகைகளில் ஒன்று திராட்சை.

திராட்சைப்பழம் பல வண்ணங்களில் கிடைக்கும்; அதுபோல்தான் அவற்றின் நன்மைகளும். அப்படியென்ன நன்மைகள்? பார்ப்போமே!

சில புற்றுநோய்கள் வராமல் தடுக்க...

உயிரணுக்களைச் சேதப்படுத்துபவை ஆக்ஸிடண்ட்ஸ் (Oxidants). திராட்சைப் பழத்தின் தோலிலும், விதையிலும் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் (Anti-Oxidants) உள்ளன. அதனால், அவை சில வகைப் புற்றுநோய்கள் வருவதிலிருந்து காப்பதாகச் சொல்லப்படுகிறது.

சருமப் பிரச்சனையா?
திராட்சை பழத்தில் உள்ள ஒரு வகை இயற்கை இரசாயனம், முகத்தில் பருக்கள் வருவதைத் தவிர்க்க உதவுமாம். அது சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் துணை புரியுமாம்.

மூட்டுகளுக்கு பலம்:
திராட்சைப் பழத்தை தினமும் உட்கொண்டுவந்தால் மூட்டுகளில் ஏற்படும் வலிகளை ஓரளவு குறைக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். மூட்டுகளின் அசைவுகளை வேகமாக்கவும் அவை உதவுவதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வொன்று குறிப்பிட்டுள்ளது.

இதய நரம்புகளைச் சீராக்கும்:
இதயத்தில் உள்ள நரம்புகளை ஆரோக்கியமாக்கி, உடலைச் சுறுசுறுப்பாக செயல்படவைக்க திராட்சைப்பழம் உதவியாக இருக்குமாம்.

வேறு நன்மைகள்:
திராட்சையில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதையும், கொழுப்பு சேர்வதையும் தவிர்க்கும்.
கண் பார்வையை மேம்படுத்தும் சத்துக்களும், ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மைகளும் திராட்சையில் இருப்பதாகவும் மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

ஆனால் எதையும் அளவோடுதான் சாப்பிடவேண்டும்; அதை மறந்துவிடாதீர்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்