Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புல்லில் உறிஞ்சு குழல்..உறிஞ்சு குழல்களில் பல வகை

பிளாஸ்டிக், சுற்றுச்சூழலுக்குக் கெடுதல் ஏற்படுத்துவதை உணர்ந்து, பல நிறுவனங்களுடன் பொதுமக்களும் அதன் பயன்பாட்டைக் குறைத்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
புல்லில் உறிஞ்சு குழல்..உறிஞ்சு குழல்களில் பல வகை

(படம்: Reuters)

பிளாஸ்டிக், சுற்றுச்சூழலுக்குக் கெடுதல் ஏற்படுத்துவதை உணர்ந்து, பல நிறுவனங்களுடன் பொதுமக்களும் அதன் பயன்பாட்டைக் குறைத்து வருகின்றனர்.

அதற்கு ஓர் உதாரணம், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களைத் தவிர்க்கும் முயற்சி.

பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களுக்குப் பதிலாக காகிதம் மற்றும் உலோகத்தால் ஆன உறிஞ்சு குழல்களைப் பலர் பயன்படுத்துகின்றனர்.

அவற்றையும் தாண்டி, வித்தியாசமான உறிஞ்சு குழல்களில் பல வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அவை என்னென்ன?

புல்லால் செய்யப்பட்ட உறிஞ்சு குழல்கள்

(படம்: Reuters)

(படம்: Reuters)

வியட்நாமில் புல்லைக் கொண்டு உறிஞ்சு குழல்கள் அறிமுகமாகியுள்ளன.

புல்லால் செய்யப்பட்ட உறிஞ்சு குழல்களை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

அவற்றுக்கு மக்கிப்போகும் தன்மையும் உள்ளது.

அரிசியால் செய்யப்பட்ட உறிஞ்சு குழல்கள்

(நன்றி: Facebook/ Rice Straw)

(படம்: Facebook/

அரிசி, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த உறிஞ்சு குழல்கள் சாப்பிடக்கூடியவை.

மக்கிப்போகக்கூடிய தன்மை கொண்ட இவை, 90 நாள்கள் வரை நீடிக்கும்.

சூடான பானங்களில் கூட, இந்த உறிஞ்சு குழல்கள், 2 முதல் 3 மணி நேரம் வரை நீடிக்கலாம்.

பாஸ்டாவால் செய்யப்பட்ட உறிஞ்சு குழல்கள்

(நன்றி: Stroodles)

கோதுமை, தண்ணீர் இரண்டும் கொண்டு செய்யப்பட்ட பாஸ்டா உறிஞ்சு குழல்கள், சாப்பிடக்கூடியவை.

உறிஞ்சு குழல்கள், பானங்களின் சுவையைப் பாதிக்க மாட்டா என்று கூறப்படுகிறது.

இவை 12 மணி நேரத்திற்குள் மக்கிப்போகக்கூடிய தன்மை கொண்டவை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்