Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் பசுமைச் சிந்தனை நாடுகள்

உலகப் பெருங்கடல்களின் வெப்பநிலை, முன்னர் மதிப்பிடப்பட்டிருந்ததைவிட  40 விழுக்காடு விரைவாக அதிகரிப்பதாக அண்மை ஆய்வுகள் கூறுகின்றன.

வாசிப்புநேரம் -
பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் பசுமைச் சிந்தனை நாடுகள்

படங்கள்: Pixabay

(வாசிப்பு நேரம்: 2 நிமிடத்திற்குள்)

உலகப் பெருங்கடல்களின் வெப்பநிலை, முன்னர் மதிப்பிடப்பட்டிருந்ததைவிட  40 விழுக்காடு விரைவாக அதிகரிப்பதாக அண்மை ஆய்வுகள் கூறுகின்றன.

அதன் தொடர்பில் வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாட்டு நிறுவன ஆய்வாளர்கள், சென்ற ஆண்டு வலியுறுத்தினர்.

தவறினால், 2040ஆம் ஆண்டுக்குள் பெருவெள்ளம், வறட்சி, உணவுப் பஞ்சம், காட்டுத் தீச் சம்பவங்கள் ஆகியவை ஏற்படலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் அடிப்படையில், "சிறந்த நாட்டுக்கான குறியீடு" அவற்றைத் தரவரிசைப்படுத்துகிறது.

ஒரு நாட்டின் பொருளியல் நிலை, அது மேற்கொள்ளும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள், அதன் எரிசக்திப் பயன்பாட்டில் எத்தனை விழுக்காடு புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி போன்றவை கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

அந்த அம்சங்கள் நாடுகளுக்கு நன்மை பயப்பதோடு, பூமி முழுமைக்கும், மானுடத்துக்கும் நல்லது செய்வதால் அந்த அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.

பட்டியலின் முதலிடத்தில் நார்வே.

காரணம் என்ன?

மின்-கார்ப் பயன்பாடு அங்கு அதிகம்; அரசாங்கமும் 2030ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை வெகுவாகக் குறைக்க உறுதியளித்துள்ளது.

ஆனாலும், திறந்தவெளி வாழ்க்கை மீதான மக்களின் ஈடுபாடுதான் முக்கிய காரணம். வெளியில் நேரம் செலவழித்தால் உடல்நலமும் மகிழ்ச்சியும் கூடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

ஒரு பக்கம், பசுமை முயற்சிகள்.....

மறுபக்கம் எண்ணெய் எரிவாயு உற்பத்தியிலும் நார்வே முக்கிய இடம் வகிக்கிறது.

இது இரட்டை நிலை என்ற குறைகூறலும் இல்லாமலில்லை.

இருந்தாலும், இயற்கையோடு பிணைந்த வாழ்வை அதிகம் விரும்பும் நார்வே மக்களின் பசுமைச் சிந்தனை நாட்டிற்கு நல்ல பெயர் ஈட்டித்தந்துள்ளது.

சிறந்த நாட்டுக்கான குறியீட்டுப் பட்டியலில் போர்ச்சுகல் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

உருகுவே, கென்யா, நியூசிலந்து ஆகியவை முறையே 3, 4, 5ஆம் இடங்களில் வந்துள்ளன.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்