Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

திமிங்கிலங்கள் மாண்டு கரை ஒதுங்குவதற்கு கடல் வெப்பமும் காரணமா?

அமெரிக்காவின் மேற்குக் கடல்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக  பழுப்புத் திமிங்கிலங்கள் மாண்டு கரை ஒதுங்கும் போக்கு அதிகரித்துவருகிறது.

வாசிப்புநேரம் -
திமிங்கிலங்கள் மாண்டு கரை ஒதுங்குவதற்கு கடல் வெப்பமும் காரணமா?

படம்: AFP / JUSTIN SULLIVAN / GETTY IMAGES NORTH AMERICA

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

அமெரிக்காவின் மேற்குக் கடல்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பழுப்புத் திமிங்கிலங்கள் மாண்டு கரை ஒதுங்கும் போக்கு அதிகரித்துவருகிறது.

ஆர்க்டிக் கடல் பகுதியில் உயர்ந்துவரும் வெப்பமே அதற்குக் காரணம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 58 பழுப்புத் திமிங்கிலங்கள் மாண்டு கரை ஒதுங்கியுள்ளதாக அமெரிக்கப் பெருங்கடல் நிர்வாகம் தெரிவித்தது.

தற்போது திமிங்கிலங்கள் வடக்கு நோக்கி பயணம் செய்து கொண்டிருப்பதாகவும், கடலில் அதிகரிக்கும் வெப்பத்தால் அவற்றுக்கு போதிய உணவு கிடைக்காமல் பாதிக்கப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மாண்ட திமிங்கிலங்களிடம் நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில் அவை ஊட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கோடைக்காலத்தின்போது தேவையான உணவை உட்கொண்டு அதைக் கொழுப்பாக உடலில் சேமிக்கும் திமிங்கிலங்கள், குளிர் காலத்தில் அதைச் செலவழிப்பதுண்டு.

ஆனால், போதுமான உணவின்றிச் சோர்வுறும் திமிங்கிலங்கள் இடப்பெயர்ச்சியின்போது தொடர்ந்து நீந்தமுடியாமல் மாண்டுபோகின்றன என்கின்றனர் ஆய்வார்கள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்