Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கைகளைச் சுத்தம் செய்வதற்கு வீட்டிலேயே தயாரிக்கப்படும் கிருமிநாசினியை விட சவக்காரமும், தண்ணீருமே பாதுகாப்பானவை: மருத்துவர்கள்

நொவல் கிருமித்தொற்று குறித்த அச்சம் நிலவும் வேளையில், சுகாதாரத்தைப் பேணும் பழக்கங்கள், சுவாசக் கவசம் அணிதல், கைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவது போன்றவை குறித்துப் பரவலாகப் பேசப்படுகிறது.

வாசிப்புநேரம் -

நொவல் கிருமித்தொற்று குறித்த அச்சம் நிலவும் வேளையில், சுகாதாரத்தைப் பேணும் பழக்கங்கள், சுவாசக் கவசம் அணிதல், கைகளைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவது போன்றவை குறித்துப் பரவலாகப் பேசப்படுகிறது.

சமூக ஊடகங்களில் சொந்தமாகக் கிருமிநாசினி தயாரிப்பது குறித்த சில பதிவுகளும் இடம்பெறுகின்றன.

சில வகை எண்ணெய்கள், எளிதில் ஆவியாகக்கூடிய எத்தனால்(Ethanol) போன்ற ரசாயனங்கள், கற்றாழை கலந்த பொருள்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கும் முறைகளும் பதிவிடப்பட்டுள்ளன.

எளிதில் ஆவியாகக் கூடிய ரசாயனப் பொருள்கள் கிருமிகளைக் கொல்வதாகப் பலரும் நம்புகின்றனர்.

அது சரியா?

CNA Lifestyle அணுகிய சில மருத்துவர்கள் பெரும்பாலும் அப்படியல்ல என்கின்றனர்.

எளிதில் ஆவியாகக்கூடிய எத்தனால்(Ethanol) போன்ற ரசாயனங்கள் குறிப்பிட்ட அளவில் இருந்தால் மட்டுமே பலனளிக்கக்கூடியவை.

கைகளைச் சுத்தம் செய்யும் கிருமிநாசினியில் 60 விழுக்காடு எத்தனால் இருக்கவேண்டும்.

ஆனால் எண்ணெய், கற்றாழைப் பொருள்கள் கிருமிகளிலிருந்து பாதுகாப்பு தருவதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம் எத்தனால் விழுக்காடு அதிகமானால் அது நமது தோலுக்கு உகந்ததல்ல.

அதனால் தோலில் வறட்சி, வெடிப்புகள் ஏற்படலாம்.

விற்பனைக்கு வரும் கிருமிநாசினிகளில் சரியான அளவில் அனைத்தும் கலந்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்துவதே சிறந்தது என்று மருத்துவர்கள் கருத்துரைத்தனர்.

வாய் கொப்பளிக்கப் பயன்படும் திரவம், மதுபானம் ஆகியவற்றப் பயன்படுத்தலாமா என்பது சிலரின் சந்தேகம்.

வாய் கொப்பளிக்கப் பயன்படும் திரவத்தைக் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்தக் கூடாது. கைகளைச் சுத்தப்படுத்தத் தேவையான அளவில் ரசாயனப் பொருள் அதில் இருக்காது என்பதை மருத்துவர்கள் சுட்டினர்.

ஈர டிஷ்யூத் தாளும் உரிய பலனைத் தராது. அது சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்துவதற்கானது என்று அவர்கள் விளக்கினர்.

கிருமிநாசினி கிடைக்காவிட்டால் வேறு என்னதான் செய்வது?

20 விநாடிகளுக்கு சவக்காரம், தண்ணீரைக் கொண்டு கழுவலாம்.

சிறுவர்களை 2 முறை Happy Birthday பாடல் பாடும்வரைக் கழுவச் சொல்லலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்