Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கிருமிநாசினி பயன்படுத்துவதை எப்போது தவிர்க்கவேண்டும் ?

கிருமிநாசினியைப் பயன்படுத்துவதைவிட கைகளைக் கழுவினால் அவற்றில் உள்ள அழுக்கும் கிருமியும் அகன்றுவிடும்; நோய்த்தொற்றிலிருந்து நல்ல பாதுகாப்பைப் பெறலாம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வாசிப்புநேரம் -
கிருமிநாசினி பயன்படுத்துவதை எப்போது தவிர்க்கவேண்டும் ?

(படம்: Pixabay)

கிருமிநாசினியைப் பயன்படுத்துவதைவிட கைகளைக் கழுவினால் அவற்றில் உள்ள அழுக்கும் கிருமியும் அகன்றுவிடும்; நோய்த்தொற்றிலிருந்து நல்ல பாதுகாப்பைப் பெறலாம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பலர் கிருமிநாசினியைப் பயன்படுத்துவதால் கைகளைக் கழுவத் தேவையில்லை என்று நம்புகின்றனர். அது உண்மையில்லை.

கிருமிநாசினியைக் குறிப்பிட்ட விதங்களில் மட்டுமே பயன்படுத்தலாம்.

கிருமிநாசினி பயன்படுத்துவதை எப்போது தவிர்க்கவேண்டும்...? சில குறிப்புகள்:

1. கைகள் அழுக்காக இருந்தால்...

அழுக்கான கைகளில் கிருமிநாசினியைச் சேர்க்கும்போது அதிலுள்ள ரசாயனம் அழுக்குடன் சேர்ந்து பிசுபிசுப்பாகும். மேலும், ஆல்கஹால் (alcohol) கொண்ட கிருமிநாசினி அழுக்கை அகற்றாது; கிருமிகளை மொத்தமாகக் கொல்லாது.

2. ரசாயனங்களைப் பயன்படுத்திய பின்...

பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்திய பின் கிருமிநாசினி கொண்டு கைகளைத் "தூய்மைப்படுத்துவதைத்" தவிர்க்கவேண்டும்.

தோட்டவேலை செய்யும் ஊழியர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திய பின் கிருமிநாசினி பயன்படுத்தியவர்களின் உடலில் அதிகப் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

3. எவரையும் எதையும் தொடவில்லை என்றால்...

தேவையில்லாமல் கிருமிநாசினி பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். அவ்வாறு தேவையின்றி அதைப் பயன்படுத்தும்போது, கிருமிகளிடையே கிருமிநாசினியை எதிர்க்கக்கூடிய சக்தியை அது உண்டாக்கும்.

4. வெளியே இருக்கும்போது...

வெளியே இருக்கும்போது நீங்கள் சாப்பிடவில்லை என்றால், கிருமிநாசினி பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

நோய்த்தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க, உங்கள் முகம், குறிப்பாக, உங்கள் மூக்கு, வாய், கண்கள் ஆகியவற்றைத் தொடுவதைத் தவிர்க்கவேண்டும். அப்படித் தொட்டால் கைகளிலிருக்கும் கிருமிகள் அவற்றிலிருந்து உங்கள் உடலுக்குள் செல்லும்.

5. அருகில் யாராவது தும்மினால்...

யாராவது தும்மும்போது, கிருமி காற்றுவழியே செல்லும் நீர்த்துளிகளின் மூலம் பரவும். உங்கள் கைகளை வீணாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதற்கு மாறாக, நீங்கள் முகக்கவசம் அணிந்து, உங்கள் முகத்தைக் கைகள் கொண்டு தொடுவதைத் தவிர்ப்பதே சிறந்தது. அருகில் கைகழுவும் இடம் இருந்தால், அதைப் பயன்படுத்தி சவர்க்காரத்தால் கைகளைக் கழுவலாம்.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்