Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ - 105 வயது மருத்துவர் பகிர்ந்துகொண்ட சில குறிப்புகள்

ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ - 105 வயது மருத்துவர் பகிர்ந்துகொண்ட சில குறிப்புகள்

வாசிப்புநேரம் -
ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ - 105 வயது மருத்துவர் பகிர்ந்துகொண்ட சில குறிப்புகள்

படம்: Unsplash/Priscilla Du Preez

ஜப்பானிய மருத்துவர் டாக்டர் ஷிகியெக்கி ஹினொஹரா (Shigeaki Hinohara) 105 ஆண்டுகள் வரை உயிர்வாழ்ந்ததற்குப் பல காரணங்கள் இருந்தன.

அவர் 2017ஆம் ஆண்டில் இறப்பதற்கு முன், தோக்கியோவிலுள்ள செயிண்ட் லூக்ஸ் அனைத்துலகப் பல்கலைக்கழகம் (St. Luke's International University), செயிண்ட் லூக்ஸ் அனைத்துலக மருத்துவமனை (St. Luke's International Hospital) ஆகியவற்றில் கௌரவத் தலைமைத்துவப் பொறுப்பில் இருந்தார்.

அவர் எழுதிய "Living Long, Living Good" என்ற புத்தகத்தில் அவரது நீண்ட ஆயுளுக்கான ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவற்றில் ஒருசில:

1. வேலையிலிருந்து ஓய்வு பெறுவதைத் தள்ளிப்போடுங்கள்:

65 வயதைக் கடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வாறு செய்யுங்கள். மக்களுக்குத் தற்போது நீண்ட ஆயுள் உள்ளது; அவர்கள் பல்லாண்டு வாழ்வதால் நீண்ட காலம் வேலை செய்யலாம்.

டாக்டர் ஹினொஹரா, அவர் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்புவரை வேலை செய்தார்.

2. படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்; உடற்பயிற்சி செய்யுங்கள்

அடிக்கடி உடற்பயிற்சி செய்வதால் உடல் பலமடைகிறது. டாக்டர் ஹினொஹரா ஒரே தடவையில் இரண்டு படிகளை ஏறி தசைகளுக்குப் பயிற்சியளித்தார்!

3. ஏதாவது ஒரு பொறுப்பில் இருங்கள்

நாள்தோறும் அதிக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தால் , சீக்கிரமாக முதுமை தட்டும்; இறப்பதற்கும் பாதை அமைக்கும் எனக் கருதினார் டாக்டர் ஹினொஹரா.

எந்நேரமும் சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டு ஏதாவதொரு வேலையிலோ பொறுப்பிலோ இருந்தால் நீண்டகாலம் வாழலாம்.

மற்றவர்களுக்கு உதவிசெய்வதில்தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது என்று நம்பிய அவர், தமது
வாழ்நாளில் பலருக்கும் உதவி புரிந்து, வேலையில் ஆழ்ந்திருந்ததால் மனத்தில் நிம்மதியையும் நிறைவையும் உணர்ந்தார்.

4. அதிக விதிமுறைகள் மன உளைச்சலை உண்டாக்கும்; அவற்றைக் குறைத்துவிடுங்கள்

மன உளைச்சலைக் குறைத்துக்கொள்ள அதிகமான விதிமுறைகளைத் தவிர்க்கவேண்டும்.
அதிகமான விதிமுறைகளைப் பின்பற்றுவதால் ஏற்படும் மன உளைச்சல் நிம்மதியைத் தராது; நீண்டகாலம் வாழ முடியாது.

5. மருத்துவர்களால் எல்லாவற்றுக்கும் தீர்வு காணமுடியாது; மற்ற தீர்வுகளையும் நாடுங்கள்

மருத்துவர் பரிந்துரைப்பதைக் கண்மூடித்தனமாகக் கேட்கவேண்டாம்.

அவர் பரிந்துரைக்கும் சிகிச்சை முறையை அவர் தமது பிள்ளைக்கு அல்லது வாழ்க்கைத் துணைக்குப் பரிந்துரைப்பாரா என்று கேளுங்கள்.

மருத்துவம் மூலம் அனைத்து நோய்களுக்கும் தீர்வுகாண முடியாது. சில நேரங்களில் மனிதர்களின் நோய்களுக்கும் அவர்களின் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பது டாக்டர் ஹினொஹராவின் கருத்து.

அவரைப் பொறுத்தவரையில் கலைகளைக் கற்றுக்கொண்டால் வலிகளை மறக்கலாம்; நோயிலிருந்து குணமடையலாம். நிம்மதி, மகிழ்ச்சி, மன நிறைவு போன்றவற்றைப் பெறலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்