Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உலகக் கிண்ண ஆட்டங்களால் மாரடைப்பு ஏற்படுமா?

பந்து எங்கு செல்லும், வலையை நோக்கிச் செல்லுமா, கோலாகுமா, இல்லை வாரிவிடுமா...

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ண ஆட்டங்களால் மாரடைப்பு ஏற்படுமா?

(படம்: Pixabay)

உலகக் கிண்ண ஆட்டங்களை அமைதியாக அமர்ந்து பார்ப்போர் அரிது.

உற்சாகம், பதற்றம் இப்படிப் பலவிதமான உணர்வுகள்.

சாதாரண மனிதர்களுக்கே அவ்வாறு இருந்தால் பலவீனமான இதயம் கொண்டவர்ளுக்கு எப்படி இருக்கும்?

பந்து எங்கு செல்லும், வலையை நோக்கிச் செல்லுமா, கோலாகுமா, இல்லை வாரிவிடுமா...

இப்படிப் பல கவலைகள் ஆட்டத்தின்போது.

ஒருவேளை எதிர்பார்த்ததுபோல் கோல் கிடைத்தால் "கோல்!" என்று அடிவயிற்றிலிருந்து உற்சாகத்தில் கத்துவோர் பலர்.

(படம்: Pixabay)

ஆட்டத்தை ரசிக்கும் மகிழ்ச்சியில் பலர் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பதுண்டு.

பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று கூறப்படுகிறது.

அத்தகையோரின் இதயத் துடிப்பை குறிப்பாகப் பெனால்ட்டி வாய்ப்புகளின்போது சோதித்துப் பார்த்ததில் இதயத் துடிப்பு எகிறுவது தெரிந்தது.

விறுவிறுப்பான ஆட்டங்களைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது இதயத் துடிப்பு 75 விழுக்காடு அதிகரிப்பதாகவும், ஆட்டத்தை நேரில் பார்க்கும்போது 110 விழுக்காடு அதிகரிப்பதாகவும் கனடிய ஆய்வொன்று கூறுகிறது.

மிகக் கடுமையான உடற்பயிற்சி இதயத்தைப் பாதிப்பதற்கு ஈடானது இத்தகைய ஆட்டங்களில் ஒன்றிப்போய்விடுவது என்கின்றனர் நிபுணர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்