Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இதய நோய் அபாயம் - பெண்களின் மகப்பேற்றைப் பாதிக்கக்கூடும்

என்றாலும், எந்த அளவு கொழுப்பு அதிகமிருந்தால் அது பெண்களின் மகப்பேற்றைப் பாதிக்கும் என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.   

வாசிப்புநேரம் -
இதய நோய் அபாயம் - பெண்களின் மகப்பேற்றைப் பாதிக்கக்கூடும்

(படம்:AFP/OLEXANDER ZOBIN)

இரத்தத்தில் உள்ள மிதிமிஞ்சிய கொழுப்புச் சத்து பெண்களின் மகப்பேற்று வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

4,322 பெண்கள் ஆய்வில் கலந்துகொண்டனர். 

அவர்களில் 2,157 பெண்களுக்கு இரண்டு அல்லது அதற்கு அதிகமான பிள்ளைகள் இருந்தனர். 

488 பெண்களுக்கு ஒரு பிள்ளை மட்டும் இருந்தது.

1,677 பெண்களுக்குப் பிள்ளைகள் இல்லை. 

இரண்டு அல்லது அதற்கு அதிகமான பிள்ளைகள் கொண்ட பெண்களுக்கும் ஒரு பிள்ளை அல்லது பிள்ளை இல்லாத பெண்களுக்கும் சில முக்கிய வித்தியாசங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

ஒரு பிள்ளை அல்லது பிள்ளை இல்லாத பெண்களிடையே புகைப்பிடிப்பவர்கள், கூடுதல் எடை கொண்டவர்கள், நீரிழிவு நோய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்தது. 

என்றாலும், எந்த அளவு கொழுப்பு அதிகமிருந்தால் அது பெண்களின் மகப்பேற்றைப் பாதிக்கும் என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்